போலீஸ் குற்றவாளிகளுக்கு வேலை பாக்குறாங்க.! கொதித்தெழுந்த அருவி பட நடிகை.!
தமிழ்நாட்டின் பொள்ளாச்சி மாவட்டத்தில் பெண்கள் பலர் பாலியல் துன்புறுத்தல் கொடூரமான வழக்கு தொடர்பாக நான்கு பேரைக் கைது செய்தனர் போலீசார். தற்போது இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில் பலரும் தங்களது கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.
https://www.youtube.com/watch?v=ML-lEt5anCs
பாலியல் துன்புறுத்தல் (354 ஏ) மற்றும் தாக்குதல் (354 பி) ஆகியவற்றுடன் சேர்த்து ஐபிசி பிரிவின் கீழ் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2000 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவுகளிலும் மற்றும் பெண்களின் மனிதாபிமான சட்டத்தின் கீழ் தமிழ்நாடு தடைவிதிப்புகளிலும் அவை பதிவு செய்யப்பட்டன.
இதையும் படியுங்க : அருவி நாயகி அதிதி பாலன் நடித்த முதல் படம் அஜித் படத்துலயா ? எந்த படம் தெரியுமா ?
இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். மேலும், பல்வேறு நடிகர், நடிகைகளும் இந்த சம்பவம் குறித்து தங்களது கருத்துக்களையும் கண்டனத்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் நிலையில் தற்போது அருவி படத்தில் நடித்த அதிதி பாலன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.