ஈழப் பெண் பண மோசடி புகார் குறித்த கேள்வியால் கடுப்பாகி ஆர்யா சொன்ன பதில் - வைரலாகும் வீடியோ.

By Rajkumar · 16/10/2021

இழப் பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பல லட்சங்களை பெற்றதாக கடந்த சில வாரங்களுக்கு முன் ஆர்யா மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேட்க கடுப்பாகி இருக்கிறார் ஆர்யா. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வரும் ஆர்யா மீது கடந்த சில வாரங்களுக்கு முன் ஆர்யா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறி பல லட்சம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாக இலங்கைப் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளதாக பரவி வரும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

https://twitter.com/chettyrajubhai/status/1449243144827011082

இப்படி இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சிபிசிஐடி தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கேட்டதையடுத்து விசாரணையை ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது. இந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகர் ஆர்யாவுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதன் அடிப்படியில், ஆர்யா நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.

இதையும் பாருங்க : தனுஷ் போட்ட ஒற்றை ட்வீட் - கழுவி ஊற்றும் அஜித் ரசிகர்கள். ஏன்னு பாருங்க (இதுக்கு ஒரு முடிவே இல்லையா)

இப்படி ஒரு நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. போலீசார் நடத்தியுள்ள விசாரணையில் நடிகர் ஆர்யா போல் நடித்து இலங்கை பெண்ணிடம் பணம் பறித்த சென்னைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த முகமது அர்மான் மற்றும் உடந்தையாக இருந்த ஹூசைனி பையாக் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்த பிரச்சனையால் பல நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இந்த பிரச்சனையில் இருந்து தன்னை மீட்ட காவல்துறைக்கு நன்றி தெரிவித்து இருந்தார் ஆர்யா. இப்படி ஒரு நிலையில் ஆர்யா, விவேக் நினைவாக மரம் நடும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், பணமோசடி விவகாரம் குறித்து கேள்வி கேட்ட போது 'ஹே, சும்மா இருங்கப்பா போர் அடிக்காதீங்கபா' என்று கூறியுள்ளார் ஆர்யா.

Tamil Behind Talkies AMP · Quick view
View full