தனுஷ் போட்ட ஒற்றை ட்வீட் – கழுவி ஊற்றும் அஜித் ரசிகர்கள். ஏன்னு பாருங்க (இதுக்கு ஒரு முடிவே இல்லையா)

0
3499
- Advertisement -

உலகமே வியந்தும், விரும்பியும் பார்க்கும் விளையாட்டில் கிரிக்கெட்டும் ஒன்று. கிரிக்கெட் என்றாலே போதும் சிறு குழந்தையில் இருந்து பெரியவர்கள் வரை என அனைவரும் துள்ளி குதித்து விளையாடுவார்கள். அந்தளவிற்கு கிரிக்கெட் மனிதர்களின் வாழ்க்கையில் ஒன்றாக இணைந்து உள்ளது. அதிலும் ஐபிஎல் கிரிக்கெட் வருகிறது என்று சொன்னாலே போதும் ஒட்டுமொத்த மக்களும் குஷியில் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள். அதிலும் ஐபிஎல் கிரிக்கெட் என்றால் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது சென்னை சூப்பர் கிங் அணி தான்.

-விளம்பரம்-

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் பிற மாநிலங்களிலும் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்று நடந்த பைனல் விளையாட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை தட்டி சென்றது. இதனால் ஒட்டுமொத்த தமிழக மக்களும் செம கொண்டாடத்தில் இருந்தது அனைவருக்கும் தெரியும்.

- Advertisement -

அதுமட்டும் இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை அனைத்து ரசிகர்களும் தீபாவளி பண்டிகையை போல் கொண்டாடி வருகிறார்கள். பொதுவாகவே எதாவது ஒரு விஷயம் என்றாலும், விளையாட்டு குறித்தும் வெற்றி பெற்றதை குறித்தும் ரசிகர்களும் பிரபலங்களும் மக்களும் சோசியல் மீடியாவில் பதிவிடுவது வழக்கமான ஒன்று.

அந்த வகையில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து பல பிரபலங்களும் ரசிகர்களும் சோசியல் மீடியாவில் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் நடிகர் தனுஷ் போட்ட ட்வீட் அஜித் ரசிகர்களை வம்புக்கு இழுக்க வைத்ததாக இருந்தது என்று கூறப்படுகிறது. நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது குறித்து ட்வீட் போட்டு உள்ளார். அப்படி என்ன தான் அவர் போட்டாருன்னா, One And Only Thala Dhoni என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

அவ்வளவு தான் இதைப்பார்த்த அஜித் ரசிகர்கள் கொந்தளித்து போய் கோபமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக அஜித் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். இவரை எப்போதும் தல என்று தான்செல்லமாக அழைப்பார்கள். இந்த சூழ்நிலையில் தனுஷ் தோனியை தல என்று குறிப்பிட்டு இருப்பது அஜித் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement