பட்டாசு கடையின் வெடி விளம்பர போஸ்டரில் மனைவியின் புகைப்படம் – கடுப்பாகியுள்ள ஆர்யா.

0
1625
arya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிளேபாயாக வலம் வந்தவர் நடிகர் ஆர்யா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். இவர் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த அறிந்தும் அறியாமலும் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். பின் 2018 ஆம் ஆண்டு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான மிகப் பிரபலமான நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிளை.

-விளம்பரம்-

உண்மையாலுமே இந்த நிகழ்ச்சி ஆர்யாவுக்கு பெண் தேடும் நிகழ்ச்சி என்றே பலரும் நம்பினார்கள். ஆனால், அது எல்லாம் நிகழ்ச்சிக்காக தான் என்று தெரியவந்தது. மேலும், இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் நடிகர் ஆர்யா அவர்கள் நடிகை சாய்ஷா அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.நடிகர் ஆர்யாவும், சாயிஷாவும் கஜினிகாந்த் என்ற படத்தில் இணைந்து நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு பிறகு தான் இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள்.

- Advertisement -

கடந்த ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளிவந்த மகாமுனி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் ஆர்யா அவர்கள் தற்போது பா. ரஞ்சித் இயக்கும் படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சிகள் கூட செய்து வருகிறார். என்ன நடந்தாலும் நடிகர் ஆர்யா உடற் பயிற்சி செய்வதை மட்டும் விடுவதே இல்லை. இப்படி ஒரு நிலையில் நடிகர் ஆர்யா, உடற் பயிற்சி செய்யும் ஜிம் இருக்கும் இடத்தில் பட்டாசு கடை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

அந்த பட்டாசு கடையில் தனது மனைவி சாயீஷாவின் போஸ்ட்டரை பார்த்த ஆர்யா, நேரடியாக அவர்களிடம் சொல்லாமல், கடுப்பில், ஜிம் உரிமையாளர்களிடம் கூறி அதன்பின் அந்த பட்டாசு கடை உரிமையாளர்களிடம் சொல்லி அந்த போஸ்ட்டரை அகற்றியுள்ளார். ஏற்கனவே நடிகர் ஆர்யா, தன்னை விட வயதில் சிறிய பெண்ணை திருமணம் செய்துகொண்டார் என்ற விமர்சனங்களும் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement