லவ்வர்ஸ் டே ஸ்பெசல்.! சயிஷாவுடன் திருமணம்.! அதிகாரப்ர்வ தகவலை வெளியிட்ட ஆர்யா.!

0
1378
Arya-sayesha
- Advertisement -

கடந்த சில மாதங்களாக ஆர்யா மற்றும் சயீஷா காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனை உறுதி செய்யும் விதமாக ஆர்யா மற்றும் சயீஷாவின் திருமணம் குறித்த அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஆர்யாவிற்கு பெண் தேடும் நிகழ்ச்சி என்ற பெயரில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சி துவங்கியது இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெரும் நபரை ஆர்யா திருமணம் செய்துகொள்ள போகிறார் என்று அறிவித்திருந்தனர்.ஆனால், இறுதி போட்டியில் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் டிமிக்கு கொடுத்தார் ஆர்யா. 

- Advertisement -

இந்நிலையில் சயீஷாவுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்த போது ஆர்யாவிற்கு காதல் ஏற்பட்டு விட்டது என்றும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின. அதே போல சயிஷா வீட்டில் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொள்ளவில்லை என்ற செய்தியும் வெளியானது.

ஆர்யா – சயிஷா காதல் குறித்து இருவரும் ஓதுவரை வாய்திறக்காத நிலையில் தற்போது ஆர்யா காதலர் தினமான இன்று, தனது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஆர்யா, அதில் இரு வீட்டார் சம்மதத்துடன் வரும் மார்ச் மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக கூறியுள்ளார் ஆர்யா.

-விளம்பரம்-
Advertisement