சிம்பிளாக நடந்த ஆர்யா சயிஷா திருமணம்.! நேரில் சென்று வாழ்த்திய பிரபலங்கள் யார்னு பாருங்க.!

0
3477
- Advertisement -

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக விளங்கி வரும் நடிகர் ஆர்யா – நடிகை சயிஷாவை திருமணம் இன்று நடைபெற உள்ளது. வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய்ஷா. இவர், ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தின் போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது

-விளம்பரம்-

ஆரம்பத்தில் ஆர்யாவை சயிஷாவிற்கு திருமணம்செய்து வைக்க ஆயிஷாவின் அம்மாவிற்கு விருப்பமில்லை என்ற ஒரு செய்தியும் வெளியாகி இருந்தது. ஆனால், அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் இவர்கள் இருவரின் திருமணத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். மேலும் , இவர்களது திருமணம் செய் சாவின் சொந்த ஊரான ஹைதராபாத்தில் நடைபெற இருப்பதாகவும் முடிவாகியிருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று(மார்ச் 8) இவர்களின் திருமண வரவேற்பு மிகவும் சிம்பிளாக நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பில் இருவீட்டாரின் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் ஒருசில பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த திருமண வரவேற்பில் நடிகை சாய்ஷா இந்தி பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார் அந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் சாயிஷா.

மேலும்., இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் பிரபல இந்தி நடிகர் ஆனார் சஞ்சய் தத் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். மேலும், என்று திருமணம் நடைபெற உள்ளதால் மேலும் சில முக்கிய நடிகர் நடிகைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

Advertisement