ஆர்யா-சயிஷா திருமண தேதி மற்றும் திருமணம் நடைபெறும் இடம் இது தான்.!

0
962
Arya-sayesha

தமிழ் சினிமாவில் பிளேபாய் என்று கூறப்பட்ட வந்தவர் நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு நடிகைகளுடன்இவரை இணைத்து பல காதல் கிசுகிசுக்கள் வெளியானது. ஆனால், அவை யாவும் பொய் என்பதை தற்போது நிரூபித்துள்ளார் ஆரியா.

இறுதியாக ஆர்யா நடிகை சயீஷாவுடன் காதல் திருமணம் செய்து கொள்ள உள்ளார். தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சாய்ஷா. இவர் ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்திலும் நடித்திருந்தார்.

- Advertisement -

இந்த படத்தில் நடித்த போது ஆர்யா மற்றும் சயிஷா இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதனை கடந்த காதலர் தினத்தன்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகர் ஆர்யா. மேலும் மார்ச் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் மார்ச் மாதம் தங்களது திருமணம் நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால், திருமணம் நடைபெறும் தேதி குறித்து எந்த ஒரு தகவலையும் சொல்லவில்லை இந்த நிலையில் ஆர்யா த்ரிஷா திருமணம் தேதி வெளியாகியுள்ளது இவர்களில் வரும் 10ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது அதற்கு முன்பாக 9ஆம் தேதி திருமணம் திருமண வரவேற்பு சங்கீத விழாவும் நடைபெற உள்ளது இதற்கான வேலைகள் படு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

-விளம்பரம்-

தற்போது ஆர்யா பல்வேறு நடிகர் நடிகைகளை சந்தித்து தனது திருமண பத்திரிக்கையை கொடுத்து வருகிறாராம் சமீபத்தில் நடிகர் ஆர்யாவின் நண்பருமான விஷாலை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளார் ஆர்யா அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது ஆர்யாவின் திருமணத்தில் பல்வேறு நடிகர் நடிகைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆர்யா பங்கேற்ற எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில போட்டியாளர்களும் இந்த திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement