உறுதியானது ஆர்யா- ஷயிஷா திருமணம்.! தேதி கூட சொல்லிட்டாங்க.!

0
819
Arya-sayesha

தமிழ் சினிமாவின் ரொமான்டிக் ஹீரோவாக(அட நம்புங்க அவருக்கு ரோமன்ஸ் வரும் ) இருந்து வருபவர் நடிகர் ஆர்யா. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனக்கு திருமண ஆசை வந்துவிட்டது அதனால் யாராவது லவ் பண்ண பொண்ணு இருந்தா சொல்லுங்க என்று வீடியோ ஒன்றை வெளிடியிட்டார். 

அது வெறும் காமெடி என்று நினைத்து வந்த நிலையில் கலர்ஸ் தொலைக்காட்சில் பெண் ஆர்யாவிற்கு பெண் தேடும் நிகழ்ச்சி ஒன்று துவங்கியது இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெரும் நபரை ஆர்யா திருமணம் செய்துகொள்ள போகிறார் என்று அறிவித்திருந்தனர்.

- Advertisement -

ஆனால், இறுதி போட்டியில் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் டிமிக்கு கொடுத்தார் ஆர்யா. சமீபத்தில் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான கஜினிகாந்த் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் நடித்தபோது நாயகி சாயிஷாவுடன் காதல் ஏற்பட்டதாகவும் தற்போது அது திருமணம் செய்து கொள்கிற அளவுக்குப் போயிருப்பதாகவும் கிசுகிசுக்கபட்டது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவது தற்போது உறுதியாகியுள்ளது. இரு வீட்டார் சம்மதத்துடன் நடிகர் ஆர்யா மற்றும்
சாயிஷாவின் திருமணம் மார்ச் 9 மற்றும் 10 தேதி நடப்பதாக அறிவிக்கபட்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement