7 மாதத்திற்கு முன் இப்படி தான் இருந்தேன். ஆர்யாவின் பழைய போட்டோவை நம்ப மறுக்கும் ரசிகர்கள்.

0
16356
- Advertisement -

தமிழில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த அறிந்தும் அறியாமலும் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். பின் 2018 ஆம் ஆண்டு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான மிகப் பிரபலமான நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிளை. உண்மையாலுமே இந்த நிகழ்ச்சி ஆர்யாவுக்கு பெண் தேடும் நிகழ்ச்சி என்றே பலரும் நம்பினார்கள். ஆனால், அது எல்லாம் நிகழ்ச்சிக்காக தான் என்று தெரியவந்தது.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் நடிகர் ஆர்யா அவர்கள் நடிகை சாய்ஷா அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது பா. ரஞ்சித் இயக்கும் படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சிகள் மேற்கொண்டு வரும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘சல்பேட்டா பரம்பரை’ என்று பெயர் வைத்து உள்ளனர். சினிமாவுக்காக தங்கள் உடலை வருத்திக் கொள்ளும் எத்தனையோ ஹீரோக்களை நாம் பார்த்திருக்கிறோம்.

- Advertisement -

இப்போது ஆர்யா மேற்கொள்ளும் பயிற்சி மிகவும் மனதை வாட்டும் அளவிற்கு உள்ளது. இந்த படத்திற்காக நடிகர் ஆர்யா அவர்கள் கடுமையாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அப்படி அவர் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. இந்த நிலையில் ஆர்யா 7 மாதத்திற்கு முன்பாக, தான் எப்படி இருந்தேன் தற்போது எப்படி இருக்கிறேன் என்பதை உணர்த்தும் விதமாக பதிவு ஒன்றை செய்திருந்தார்.

மேலும், அதில் 7 மாதத்திற்கு முன்னாள் எடுத்த புகைப்படம் ஒன்றையும் தற்போது எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் ‘உண்மையில் முதல் புகைப்படத்தில் இருப்பது நீங்கள் தானா’ என்று கேள்வி கேட்டுள்ளனர். மேலும், 7 மாதத்தில் எப்படி இப்படி உடல் வரும் நீங்கள் Steroid பயன்படுத்தி தானே இப்படி ஆனீர்கள் என்று விமர்சித்து வருகின்றனர். ஆனால், இவை எதற்கும் ஆர்யா பதில் அளிக்கவில்லை.

-விளம்பரம்-
Advertisement