60 வயதில் 33 வயது பேஷன் பிரபலத்தை இரண்டாம் திருமணம் செய்த கில்லி பட நடிகர்.

0
2511
- Advertisement -

60 வயதில் இளம் பெண்ணை கில்லி பட நடிகர் திருமணம் செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தளபதி என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகர்களில் டாப்பில் இருந்து வருபவர் நடிகர் விஜய். விஜய்யின் திரைப்பயணத்தில் மாபெரும் வெற்றி கொடுத்த படங்களில் தரணி இயக்கத்தில் வெளியான கில்லி திரைப்படம் ஒன்று. இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் கில்லி.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆசிஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்தப் படம் வெளியாகி வசூலிலும், மக்கள் மத்தியிலும் நல்ல பெயரைப் பெற்றது. எப்போது பார்த்தாலும் சலிக்காத திரைப்படங்கள் வரிசையில் கில்லி திரைப்படத்திற்கு ஒரு இடம் உண்டு. இந்த படம் முழுக்க முழுக்க பக்கா கமர்சியல் படமாக இருந்தது. அண்ணன்- தங்கை இடையேயான செல்லமான சண்டை, அம்மா சென்டிமென்ட், அதிரடி ஆக்சன், காதல் என அனைத்தும் கலந்த கலவையாக இந்த படம் இருந்தது.

- Advertisement -

ஆஷிஷ் வித்யார்த்தி திரைப்பயணம்:

மேலும், இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஆஷிஷ் வித்யார்த்தி. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் பெரும்பாலும் படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் தான் நடித்து இருக்கிறார். தமிழில் தில், கில்லி, குருவி, ஏழுமலை, உத்தம புத்திரன், அனேகன் போன்ற படங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

ஆஷிஷ் வித்யார்த்தி படங்கள்:

இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என 11 மொழி படங்களில் நடித்து இருக்கிறார். சமீபகாலமாக இவர் தமிழ் மொழி படங்களில் நடிக்கவில்லை. இவர் தற்போது பெங்காலி, மராத்தி படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது. மேலும், இவர் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதையும் பெற்று இருக்கிறார். இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருக்கிறார்.

-விளம்பரம்-

ஆஷிஷ் வித்யார்த்தி முதல் திருமணம்:

மேலும், இவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் இவர் படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார். இந்நிலையில் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இரண்டாவது திருமணம் செய்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. அதாவது, இவர் நடிகை, பாடகர் மற்றும் நாடக கலைஞர் ராஜோஷி பருவாவை திருமணம் செய்திருந்தார். இவர் பழைய நடிகை சகுந்தலா பருவாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஷிஷ் வித்யார்த்தி இரண்டாவது திருமணம்:

தற்போது இவருக்கு 60 வயதாகிறது. இந்த நிலையில் இவர் கவுகாத்தியைச் சேர்ந்த ரூபாலி பருவா என்பவரை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். இவர்களுடைய திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. பின் இவர்கள் தங்களின் திருமணத்தையும் பதிவு செய்திருக்கிறார்கள். தற்போது இவர்களின் திருமண புகைப்படம் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement