60 வயதில் இரண்டாம் திருமணம் செய்த கில்லி பட நடிகர் – முதல் மனைவி போட்ட சூசக பதிவு

0
5066
- Advertisement -

60 வயதில் இளம் பெண்ணை கில்லி பட நடிகர் திருமணம் செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தளபதி என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகர்களில் டாப்பில் இருந்து வருபவர் நடிகர் விஜய். விஜய்யின் திரைப்பயணத்தில் மாபெரும் வெற்றி கொடுத்த படங்களில் தரணி இயக்கத்தில் வெளியான கில்லி திரைப்படம் ஒன்று. இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் கில்லி.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆசிஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்தப் படம் வெளியாகி வசூலிலும், மக்கள் மத்தியிலும் நல்ல பெயரைப் பெற்றது. எப்போது பார்த்தாலும் சலிக்காத திரைப்படங்கள் வரிசையில் கில்லி திரைப்படத்திற்கு ஒரு இடம் உண்டு. இந்த படம் முழுக்க முழுக்க பக்கா கமர்சியல் படமாக இருந்தது. அண்ணன்- தங்கை இடையேயான செல்லமான சண்டை, அம்மா சென்டிமென்ட், அதிரடி ஆக்சன், காதல் என அனைத்தும் கலந்த கலவையாக இந்த படம் இருந்தது.

- Advertisement -

ஆஷிஷ் வித்யார்த்தி திரைப்பயணம்:

மேலும், இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஆஷிஷ் வித்யார்த்தி. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் பெரும்பாலும் படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் தான் நடித்து இருக்கிறார். தமிழில் தில், கில்லி, குருவி, ஏழுமலை, உத்தம புத்திரன், அனேகன் போன்ற படங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

ஆஷிஷ் வித்யார்த்தி படங்கள்:

இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என 11 மொழி படங்களில் நடித்து இருக்கிறார். சமீபகாலமாக இவர் தமிழ் மொழி படங்களில் நடிக்கவில்லை. இவர் தற்போது பெங்காலி, மராத்தி படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது. மேலும், இவர் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதையும் பெற்று இருக்கிறார். இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருக்கிறார்.

-விளம்பரம்-

ஆஷிஷ் வித்யார்த்தி முதல் திருமணம்:

மேலும், இவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் இவர் படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார். இந்நிலையில் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இரண்டாவது திருமணம் செய்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. அதாவது, இவர் நடிகை, பாடகர் மற்றும் நாடக கலைஞர் ராஜோஷி பருவாவை திருமணம் செய்திருந்தார். இவர் பழைய நடிகை சகுந்தலா பருவாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் மனைவி பதிவு :

தற்போது இவருக்கு 60 வயதாகிறது. இந்த நிலையில் இவர் கவுகாத்தியைச் சேர்ந்த 33 வயது ரூபாலி பருவா என்பவரை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இவரது திருமணத்திற்கு பின்னர் சமுக வளைத்ததில் பதிவு ஒன்றை போட்டுள்ள இவரின் முதல் மனைவி ‘உணைமயானவர்கள் நீங்கள் அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்ற கேள்வியை கேட்ட விடமாட்டார்கள். அவர்கள் உங்களை காயப்படுத்தும் விஷத்தை தெரிந்தும் அதை செய்ய மாட்டார்கள். அதை நினைவில் கொள்ளுங்கள் ‘வாழ்கை எனும் புதிரில் குழப்பமடைய வேண்டாம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு ஆஷிஷ் வித்யார்த்தியை குறிப்பிட்டே போட்டு இருக்கிறார் என்று ரசிகர்கள் பலர் கமண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement