சமையல்கார கதாபாத்திரத்திற்கு 100 கிலோ ஏற்றும் சூது கவ்வும் பட நடிகர். இப்போதைக்கு இத்தனை கிலோ ஏற்றியுள்ளாராம்.
சில ஆண்டுகளாகவே நடிகர், நடிகைகள் பல பேர் படத்திற்காக தங்களுடைய உடல் எடை அதிகரிப்பதும், குறைப்பதும் போன்ற தீவிர முயிற்சியில் இறங்கி வருகிறார்கள். அந்த வகையில் கூட நடிகை அனுஷ்கா அவர்கள் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தன்னுடைய உடல் எடையை அபாரமாக கூட்டி இருந்தார். அதற்கு பின்பு பல்வேறு முயற்சிகளை செய்து உடல் எடையை குறைத்தார். அந்த வகையில் தற்போது இளம் நடிகர் அசோக் செல்வனும் தன்னுடைய உடல் எடையைத் 100 கிலோ வரை ஏற்றி வருகிறாராம். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் அசோக் செல்வன். இவர் தெகிடி, கூட்டத்தில் ஒருத்தன், சூது கவ்வும், பீட்ஸா-2, வில்லா ஆகிய படங்களில் நடித்து உள்ளார். இவர் "ஓ மை கடவுளே" என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் காதலர் தினத்தன்று பிப்ரவரி 14 அன்று திரையரங்கிற்கு வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தை இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கி உள்ளார். இந்த படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம். இத்திரைப் படத்தினை தயாரிப்பாளர் டில்லி பாபு தனது 'அக்ஸ்ஸ் பிலிம் பேக்டரி' தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தினை தயாரிக்கிறார். லியோன் ஜேம்ஸ் அவர்கள் இசையமைத்து உள்ளார்.
இதையும் பாருங்க : வேண்டாம்னாலும் கேக்க மாட்டாரு, ரொம்ப அநியாயம் பண்ணுவாரு. அஜித் குறித்து பேசிய எஸ் ஜே சூர்யா.
மேலும், இத்திரைப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் ஒரு கௌரவ தோற்றத்தில் நடித்து உள்ளார். தற்போது நடிகர் அசோக் செல்வன் அவர்கள் தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வந்து உள்ளது. இது தான் அவர் தெலுங்கில் நடிக்கும் முதல் படம். இந்நிலையில் இந்தப் படத்திற்காக அசோக் செல்வன் அவர்கள் 100 கிலோ வரை எடை ஏற்றி வருகிறார். தற்போது 20 கிலோ எடை ஏற்றி உள்ளாராம். மேலும், இவர் தீவிரமாக உடல் எடையை கூட்டும் வேலையில் இரங்கி உள்ளார். இந்த படத்தில் கதாநாயகிகளாக நித்யா மேனன் மற்றும் ரிது வர்மா நடிக்கிறார்களாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து நடிகர் அசோக் செல்வன் அவர்கள் சமீபத்தில் ஒரு பிரபல பத்திரிகைக்கு பேட்டி அளித்து இருக்கிறார். அதில் அவர் கூறியது, ஆமாம், நான் இந்த படத்தில் 100 கிலோ எடை உள்ள ஒரு சமையல்காரன் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். என்னுடைய கதாபாத்திரத்திற்கு கதைக்கு மிகுந்த தொடர்பு உள்ளது. நான் இப்போது இந்த கதாபாத்திரத்திற்காக 20 கிலோ எடையை ஏற்றி உள்ளேன். நான் இன்னும் எடையை அதிகரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கி இருக்கிறேன். இந்த மாதிரி எடை போடுவது எனக்கு வித்தியாசமாகவும், ஜாலியாகவும் இருக்கிறது என்று கூறினார்.