வேண்டாம்னாலும் கேக்க மாட்டாரு, ரொம்ப அநியாயம் பண்ணுவாரு. அஜித் குறித்து பேசிய எஸ் ஜே சூர்யா.

0
84258
vaali
- Advertisement -

தமிழ் சினிமாவில் உலகில் மிக பிரபலமான நடிகர் எஸ்.ஜே.சூர்யா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர். இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து வாலி, குஷி போன்ற பல படங்களை இயக்கி உள்ளார். பின்னர் சிறிது காலம் சினிமாவில் இருந்து இவர் பிரேக் எடுத்து கொண்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யா அவர்கள் இசை என்ற படத்தை எழுதியும், இயக்கியும், இசையமைத்தும் நடித்து உள்ளார். பின் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யாஅவர்கள் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் படத்திலும், விஜயின் மெர்சல் படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார். இந்த படங்கள் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

-விளம்பரம்-
s-j-surya

கடந்த ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பவானிசங்கர், கருணாகரன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வெளி வந்த படம் மான்ஸ்டர். இந்த படம் சூப்பர் ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து காற்றின் மொழி படத்தை இயக்கிய இயக்குனர் ராதா மோகன் அவர்கள் எஸ்.ஜே.சூர்யாவை வைத்து “பொம்மை” என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக மீண்டும் ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். இந்த பொம்மை படம் சைக்கோ மற்றும் ரொமான்டிக் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் தவிர மற்றொரு கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். இந்த படம் காதலர் தினத்தன்று வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள். இந்த படத்தை ஏஞ்சல்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிவடைந்து தற்போது தொழில் நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் அஜித் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியது, அஜித் நடிப்பைப் பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு மாஸ் காட்டி நடிப்பார். வாலி படத்தில் நான் அவருடன் இருந்த போது பல விஷயங்களில் நான் அஜித்தை கண்டு வியந்து உள்ளேன். படத்தில் எல்லா காட்சிகளையும் அற்புதமாக நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக நன்றாக நடித்திருந்தார். அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் அவர் நடித்தது என்னை மிகவும் வியப்படைய செய்தது. ஏன்னா, அஜித் அவர்களுக்கு இரண்டு மூன்று முறை முதுகு எலும்பில்(back bone) ஆப்ரேஷன் செய்திருந்தார்கள்.

வீடியோவில் :2:52 நிமிடத்தில் பார்க்கவும்

அவர் பட்ட வேதனை எல்லாம் ரொம்ப கொடுமை. ஒரு சமயம் முதுகில் இருந்து அந்த நட்டு எல்லாம் எடுத்துட்டு ஹாஸ்பிட்டலில் படுத்திருந்தார். பின் உடனே சூட்டிங் கிளம்பி வந்துவிட்டார். சொன்னாலும் கேட்க மாட்டார் சூட்டிங் வந்துடுவாரு. கிளைமாக்ஸ்ல ஸ்பிரே மேல அடிப்பங்க அப்ப அஜித் கிழ இருந்து ஷூ ஸ்டாண்ட் எடுத்து அடிப்பாரு. அந்த சீன் ரொம்ப லோ ஆங்கள். அதுவும் முதுகில் இவ்வளவு பிரச்சினை வைத்து கொண்டு பண்றது முடியாது விஷயம், சாத்தியமில்லாத ஒன்று. ஆனால், அதை அஜித் வெறிகொண்டு செய்தார். அப்ப அவர் மான்ஸ்டர் போல தல அஜித் வாலி படத்தில் நடித்து இருந்தார் என்று கூறினார்.

-விளம்பரம்-
Advertisement