தமிழ் சினிமாவில் இருந்த பல்வேறு நடிகைகள் தற்போது திருணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டனர். அந்த வகையில் பல இளசுகளின் கனவுக் கன்னியாக இருந்த அசினும் ஒருவர். தமிழ் சினிமா மலையாளத்தில் இருந்து பல்வேறு நடிகைகளை இறக்குமதி செய்துள்ளது, அப்படி வந்த நடிகைகளில் நடிகை அசின் மிகவும் தரமான நடிகை என்று கூட சொல்லலாம்.
https://www.instagram.com/p/B4MrLi5B7nL/
கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். ஷாம் மற்றும் விஷால் நடித்த 'உள்ளம் கேட்குமே' படத்தில் ஷாம் ஜோடியாக அறிமுமானார். அதன் பின்னர் சூர்யாவுடன் கஜினி, விஜயுடன் சிவாகாசி, போக்கிரி, காவலன் அஜித்துடன் வரலாறு, கமலுடன் தசாவதாரம் என தமிழின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து அசத்தினார்.
தமிழில் அசின் நடித்த கஜினி திரைப்படம் இந்தியில் அமீர் கான் நடிப்பில் வெளியானது. அந்த படம் மாபெரும் வெற்றியடைந்தது. அதன் பின்னர் தொடர்ந்து இந்தி படத்தில் கவனம் செலுத்தி வந்தார் அசின்.ஆனால், அந்த படங்கள் அனைத்தும் பெரும் தோல்வியை தழுவியது. இதனால் அசினுக்கு இந்தியில் மார்க்கட் தமிழில் மீண்டும் நுழைய முயன்றார் அதன் பின்னர் தமிழும் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வாய்ப்புகள் வரவில்லை. இதனால் சினிமாவில் நடிப்பதையே விட்டுவிட்டார் அசின்.

பின்னர் கடந்த 2016ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவுடன் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.திருமணமா ஒரே ஆண்டில் நடிகை அசினுக்கு ஆரின் என்ற பின் குழந்தையும பிறந்தது. தற்போது நாடு முழுவதும் கொரோனானாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வீட்டில் குழந்தைகள் கூட வேலை செய்கின்றனர். அந்த வகையில் அசின் மகள் வீட்டில் செய்த வேலைகளை பாருங்க.





