96 படத்தில் நான் தான் நடிப்பதாக இருந்தது.. இப்போது புலம்பும் நடிகை..

By Rajkumar · 19/10/2019

தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை திரிஷா. மேலும், திரிஷா அவர்கள் "96" என்ற படத்தின் மூலம் இந்த அளவிற்கு ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார் என்று கூறலாம். இந்த '96' படத்தின் மூலம் திரிஷா மீண்டும் ரசிகர்களின் கனவு தேவதையாக திகழ்ந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா இவர்களின் காதல் ரசிகர்களிடையே பெரிய அளவில் பேசப்பட்டது என்று கூட சொல்லலாம். இந்த 96 என்ற படம் 2018 ஆம் ஆண்டு வெளியான ஒரு காதல் காவியம் ஆகும். இந்த படத்தில் விஜய்சேதுபதி, திரிஷா, தேவதர்ஷினி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த படத்தை சி. பிரேம் குமார் அவர்கள் எழுதி, இயக்கியுள்ளார். மேலும், நந்தகோபால் இந்த படத்தை தயாரித்துள்ளார். அதோடு இந்த படத்திற்க்கு கோவிந்மேனன் இசை அமைத்துள்ளார் மற்றும் சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள்.

அது மட்டும் இல்லைங்க இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் மலையாள நடிகை மஞ்சு வாரியரை தான் முடிவு செய்திருந்தார் இயக்குனர் பிரேம் குமார். ஆனால், மஞ்சு வாரியரை தொடர்பு கொண்டு பேச பலமுறை முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களை பேசி ஒப்பந்தம் செய்ய முடியவில்லை. அதற்குப் பின்னர்தான் நடிகை த்ரிஷாவை இந்த படத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளார். தற்போது தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தில் மஞ்சுவாரியர் நடித்து உள்ளார். அது மட்டும் இல்லைங்க 96 படம் குறித்த தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அவர் கூறியது,இந்த படத்தில் நடிக்காதது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது என்று கூறினார். மேலும், என்னை எப்படியாவது அணுகி இருந்தால் நிச்சயம் நான் 96 படத்தில் நடித்திருப்பேன் என கூறியதால் நடிகர் மஞ்சு வாரியார்.

இதையும் பாருங்க : இனி அவங்க பேர கூட சொல்ல மாட்டேன்.. கவின் லாஸ்லியா தொல்லையால் சேரன் போட்ட ட்வீட்..

இந்த படம் 1996 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பில் ஒன்றாக படித்த ராமச்சந்திரன், ஜானகி தேவி ஆகியோருக்கு ஏற்பட்ட காதல் ,குடும்ப பிரச்சனையால் இருவரும் பிரிந்தார்கள். பின் ஒருவரை ஒருவர் பிரிந்தும் மறக்காமல் இருவரும் காதலித்து வந்தார்கள். பின்னர் பல வருடங்களுக்குப் பின் பழைய பள்ளி மாணவர்கள் எல்லாம் சேர்ந்து வைக்கும் பார்ட்டியில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து மனம் திறந்து பேசுகிறார். அவர்களுடைய பழைய நினைவுகளை அழகாக கூறியுள்ளார் இயக்குனர் பிரேம் குமார். மேலும், இந்த படம் வெளியானதை தொடர்ந்து மக்களிடையே நல்ல விமர்சனங்களையும், வசுலையும் பெற்றுத் தந்தது.

அது மட்டும் இல்லைங்க இந்த படத்திற்கு வெளிநாட்டிலும் அதிக வரவேற்பு கிடைத்தது. அதோடு ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த எதிர்பார்ப்பையும் இந்த படம் பூர்த்தி செய்து விட்டது என்று கூட சொல்லலாம். 22 ஆண்டுகளுக்குப் பின்பு மறுபடியும் இவர்கள் சந்திக்கும் போது நடக்கும் நிகழ்வுகளை அழகாக சித்தரித்து உள்ளார் இயக்குனர். இந்தப் படம் உலகில் எங்கேயோ? ஏதோ ஒரு நிகழ்வின் மூலம் சிதறிப்போகும் பழைய உறவுகளை ஒரு முறையாவது பார்த்தால் போதும் என்ற ஒரு அனுபவத்தை ஏற்படுத்தியது என்று கூட சொல்லலாம்.

behindtalkies AMP · Quick view
View full