இனி அவங்க பேர கூட சொல்ல மாட்டேன்.. கவின் லாஸ்லியா தொல்லையால் சேரன் போட்ட ட்வீட்..

0
10034
cheran-kavin
- Advertisement -

கவின் மட்டும் லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருந்த வரை இவர்களது உறவை பற்றி அதிகம் கவலைப்பட்டது சேரன் தான். சேரன், லாஸ்லியாவின் ஒரு தந்தை போலத்தான் பழகி வந்தார், இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசன் ஆரம்பத்திலிருந்தே கவின் மற்றும் சேரனுக்கு அவ்வளவு ராசியாக ஒத்துப்போகவில்லை. இவர்கள் இருவரும் நிறைய பேசியது கூட கிடையாது. அதே போல லாஸ்லியா சேரன் பற்றி சொன்னால் கவினுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனால் லாஸ்லியாவிடம் இருந்து கவினை பிரிக்க சேரனும், சேரனிடம் இருந்து லாஸ்லியாவை பிரிக்க கவினும் பல்வேறு செயல்களை செய்து வந்தார்கள். ஆனால், இறுதிவரை லாஸ்லியா, சேரன் மற்றும் கவின் இடையே இருந்த உறவினை தொடர்ந்து தான் வந்தார்.

-விளம்பரம்-

ஆனால், கவின் – லாஸ்லியா ரசிகர்கள் சேரன் மீது கடந்த சில நாட்களாக கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணமே, சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சேரன் கவின் குறித்து பேசுகையில் அவன் எப்போதும் என்னை தவறாக நினைத்துக் கொண்டார். அதேபோல அவர் தன்னைப் பற்றி மட்டுமே தான் யோசிப்பார் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்வதே கிடையாது. அவர் என் மீது வைத்துள்ள அபிப்பிராயம் மாற வேண்டும். அவர் என்னை எப்போதும் தவறாக தான் புரிந்து கொண்டிருக்கிறார் என்று பேசியிருந்தார் சேரன். இந்த விஷயம் கவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனால் சேரன் குறித்து பல்வேறு கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு சேரனை டேக் செய்து இருந்தனர். மேலும் ,சேரனை கிண்டல் செய்து பல்வேறு மீம்கள் மற்றும் ட்ரோல்கள் கடந்த சில நாட்களாக அதிகம் பரவி வந்தது. இதனால் சேரன் கவின் மற்றும் லாஸ்லியா குறித்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

- Advertisement -

அதில், கவின் லாஸ்லியா ரசிகப்பெருமக்களுக்கு.. உங்களுக்கு பிடித்தவர்களை BBவீட்டிற்குள்ளும் சரி வெளிவந்த பின்னும் சரி புன்படுத்தவோ அவர்கள் சுதந்திரத்தில் தலையிடவோ நான் முயலவில்லை.. நல்லெண்ண அடிப்படையில் இப்போது வேண்டாம் என கூறினேன்.. அது உங்களுக்கு தவறு எனில் வருத்தம் தெரிவிக்கிறேன். தகாத வார்த்தைகளால் பேசுவதால் பிரச்சனை தீராது.. இதை வளர்த்து நான் பெரியாளாக விரும்பவில்லை.. நான் எவ்வளவோ பேசி பழக முயன்றும் என்னோடு கவின் பேச விரும்பவில்லை புறக்கணித்தார் என்பதே உண்மை. நீங்களும் பார்த்திருப்பீர்கள்.இருந்தும் ப்ரச்னை பெரிதாகாமல் இருக்க அவருக்கு எடுத்துச்சொன்னேன்.

Cheran
cheran

கவின் லாஸ்லியா விசயத்தில் அவர்கள் முடிவுக்கோ வாழ்வுக்கோ நான் குறுக்கே நிற்க போவதில்லை.அவசியமுமில்லை. இனியொரு முறை என் நாவில் இருவர் பெயரும் வராது. இத்தோடு நீங்கள் அனைவரும் நாகரீகம் கருதி நிறுத்திக்கொண்டால் நல்லது. என் ப்ரச்னைக்கு வரவேண்டாம். நான் வீட்டிற்குள்ளும் வெளியிலும் பேசிய கருத்துக்கள் காண்பித்த உணர்வுகள் யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்.. இப்போதும் புரிந்துகொள்வீர்கள் என நினைத்தே சொல்கிறேன்.. இதற்கு மேலும் என்னை பிடிக்காதவர்கள் என்னை பின்தொடர(follow)வேண்டாம்.. மிக்க நன்றி.

-விளம்பரம்-

சேரல் கவின் மற்றும் லாஸ்யா குறித்து இப்படி ஒரு பதிவு செய்திருந்தாலும் தற்போதும் கவிலியா ரசிகர்கள் சேரனை விடுவதாக இல்லை. கவின் மற்றும் லாஸ்லியா பிரிந்ததற்கு நீங்கள் தான் முக்கிய காரணம் என்று சேரனை குற்றம்சாட்டி வருகிறார்கள். ஆனால், ஒரு சில ரசிகர்களோ இனிகவின் மற்றும் லாஸ்லியாவை பற்றி எதுவும் நீங்கள் பேசாதீர்கள், நாங்களும் உங்களை எதுவும் பேச மாட்டோம் என்று கூறிவருகிறார்கள். என்னதான் லாஸ்லியா விஷயத்தில் சேரன் தந்தை போல நடந்து வந்தாலும் கவின் மற்றும் லாஸ்லியா ஒன்று சேராதற்றகு காரணம் சேரன் தான் என்றும் தற்போதும் கவிலியா ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்

Advertisement