அடேங்கப்பா, அசுரன் பட நடிகைக்கு இவ்ளோ பிரியா மகள் இருக்காரா- ஹீரோயினாவே நடிக்கலாம் போலயே.

0
1883
manju-warrier
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ மலையாள நடிகைகள் பிராளமடைந்து இருக்கிறார்கள். அந்த வகையில் மஞ்சு வாரியரும் ஒருவர். தமிழில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான “அசுரன்” திரைப்படம் அமோக வெற்றி பெற்றது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர் மலையாள நடிகை மஞ்சு வாரியார். இவர் தமிழில் பரிட்சியமான நடிகை இல்லை என்றாலும், மலையாள திரைப்பட உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-
Image result for Manju Warrier rejected acting with dileep

அதுமட்டும் இல்லாமல் நடிகை மஞ்சு வாரியார் அவர்களை மலையாள திரை உலகம் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று தான் அழைப்பார்கள். இதனை தொடர்ந்து தமிழில் இவர் அறிமுகமான அசுரன் படம் பெரிய அளவில் வெற்றி பெற்று வருவதால் நடிகை மஞ்சு வாரியருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.நடிகை மஞ்சு வாரியர் அவர்கள் முதலில் விளம்பரப் படங்களில் தான் நடித்து வந்தார்.

- Advertisement -

அதற்கு பிறகு மலையாளத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான ‘சாக்ஷியம்’ என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின்னர் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து வந்தார். மேலும், இவர் ஒரு சில சீரியல்களில் கூட நடித்து உள்ளார். மலையாள திரை உலகில் பிரபலமான நடிகர் திலீப். நடிகர் திலீப்பும், நடிகை மஞ்சு வாரியரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்தார்கள்.

பின் இவர்கள் இருவரும் 1998 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார்கள். பின் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். மஞ்சு வாரியருக்கும் மீனாச்சி என்ற மகளும் இருக்கிறார். சமீபத்தில் அவரது புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த பலர் மஞ்சு வாரியருக்கு இவ்ளோ பெரிய மகளா என்று வியந்து உள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement