இயக்குனர் தருண் தேஜா இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் படம் அஸ்வின்ஸ். இந்த படத்தில் வசந்த் ரவி, விமலா ராமன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு விஜய் சித்தார்த் இசையமைத்திருக்கிறார். புது டெக்னாலஜி கண்ணோட்டத்தில் உருவாகி இருக்கும் அஸ்வின்ஸ் படம் ரத்தினர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் சரித்திரம் புகழ்பெற்ற இடங்களில் நடைபெற்ற மோசமான சம்பவங்கள் நிகழ்ந்த இடங்களுக்கு செல்வது பிளாக் டூரிசம் என்று அழைப்பார்கள். அப்படி ஒரு இடத்திற்கு youtube சேனல் குழு ஒன்று செல்கிறது. அதன் பின் நடப்பது தான் கதை. youtube சேனல் குழு ஒன்றில் இருப்பவர் தான் வசந்த் ரவி. இவர் அவருடைய குழுவினருடன் சேர்ந்து லண்டனில் உள்ள ஒரு பழங்கால மேன்சனுக்கு செல்கிறார்.

Advertisement

அங்கு அமானுஷ்ய சக்தி இருப்பதினால் அதை படம் எடுக்க அந்த குழு செல்கிறது. அங்கு மர்மமான விஷயங்கள் நடக்கிறது. வசந்த் ரவி தவிர மற்றவர்கள் அனைவருமே கொல்லப்படுகிறார்கள். அதற்குப்பின் என்ன நடக்கிறது? அந்த இடத்தில் நடந்த உண்மை சம்பவம் என்ன? அந்த அமானுஷ்ய இடத்திலிருந்து வசந்த் ரவி தப்பினாரா? என்பது தான் படத்தின் மீதி கதை. இதை வெறும் கதையாக மட்டும் சொல்லாமல் பிளாஷ்பேக், தற்போது உள்ள காலகட்டம் என்ற அனைத்தையும் இணைத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

வசந்த் ரவி தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். இயக்குனர் தருண் தேஜா ஹாலிவுட், வெப்சீரிஸ் என்று தற்போது இருக்கும் காலத்திற்கு ஏற்ப கதையை கொண்டு சென்றிருக்கிறார். அதோடு படத்தில் வரும் காட்சிகள், லைட்டிங், சவுண்ட் என எல்லாவற்றையும் கவனம் செலுத்தி இருக்கிறார். பொதுவாகவே பேய் படங்களில் பேய்க்கு தான் அதிக முக்கியத்துவம் தருவார்கள். ஆனால், இதை கொஞ்சம் புது விதமாக இயக்குனர் கையாண்டு இருக்கிறார்.

Advertisement

வசந்த் ரவி தவிர மற்ற கதாபாத்திரங்கள் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. வழக்கம் போல் பேய் படங்கள் பார்ப்பதை விட இந்த படத்தில் கொஞ்சம் டெக்னாலஜிகள் விஷயம் இருக்கிறது. ஆனால், சுவாரசியமும், டீவ்ஸ்ட் எதுவும் இல்லை. மொத்தத்தில் இந்த படம் ஒரு பொழுது போக்கு படம். ஒரு முறை சென்று பார்க்கலாம்.

Advertisement

நிறை:

வசந்த் ரவி நடிப்பு

இயக்குனர் கதை கொண்டு சென்ற விதம்

டெக்னாலஜிகல் அசத்தல்

ஒளிப்பதிவு பின்னணி இசை படத்திற்கு பக்கபலம்

குறை:

வழக்கமான பேய் கதை தான்

கொஞ்சம் டெக்னாலஜிக்கல் பயன்படுத்தியிருக்கிறார்கள்

நடிகர்களை தேர்வு செய்வதில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

முதல் பாதி மெதுவாக செல்கிறது

மொத்தத்தில் அஸ்வின்ஸ் – டெக்னாலஜிக்கல் அசத்தல்

Advertisement