இன்ஸ்டாகிராம் Reels மாதிரி இருக்கு – கேலி செய்த பிரசாத்துக்கு படத்தின் முக்கிய நபர் கொடுத்த பதிலடி.

0
650
Aswin
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது.அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசன் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் அஸ்வினும் ஒருவர். இந்த சீசனில் பலரது பெண்கள் மனதையும் கவர்ந்தவர் அஸ்வின் தான்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பல ஆல்பம் பாடல்களில் நடித்த அஸ்வின், கடந்த ஆண்டு ஹாரிஸ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘ஓ மனப்பெண்ணே’ படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் முதன் முறையாக ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். இயக்குனர் ஹரிஹரன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். மேலும், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்கள். தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா, குக்குவித் கோமாளி புகழ் என்று பலர் நடித்துள்ளனர்.

- Advertisement -

அஸ்வின் பேச்சால் எழுந்த பிரச்சனை :

இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 13 ஆம் தேதி வெளியாகி இருந்தது. படத்தின் இசை வெளியிட்டு விழாவில் அஸ்வின் பேசிய பேச்சு கேலிக்கு உள்ளாகி பின் பல சர்ச்சைகளுக்கு பின் இன்று இந்த படம் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படம் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மாதமே வெளியாக வேண்டியது. ஆனால், அஸ்வினின் ஆர்வக்கோளாறு பேச்சால் படத்தை ரிலீஸ் செய்தால் நன்றாக இருக்காது என்று படத்தின் வெளியீட்டை தள்ளிப்போட்டார்கள்.

பெரும் தோல்வியடைந்த படம் :

இருப்பினும் கொரோனா பிரச்சனை காரணமாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை என்பதால் தைரியமாக இந்த படத்தை பொங்கல் ரிலீஸாக வெளியிட்டு இருக்கின்றனர். ஆனால், இந்த திரைப்படம் மாபெரும் தோல்விப்படமாக அமைந்து இருக்கிறது. இந்த படத்தை பார்த்த பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர். அதே போல பல பிரபலமான விமர்சர்களும் இந்த படத்தை வறுத்தெடுத்துவிட்டனர்.

-விளம்பரம்-

வச்சி செய்த பிரசாந்த் :

அந்த வகையில் பிரபல விமர்சகரான பிரசாத்தும் தன் பங்கிற்கு இந்த படத்தை பங்கமாக வறுத்தெடுத்து இருந்தார். அதிலும், குறிப்பாக இந்த படத்தில் ஓரளவுக்கு பலமாக பார்க்கப்பட்ட ஒளிப்பதிவை கேலி செய்து இருந்தார். அதில், இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் இன்ஸ்டாகிராம் ரீலிஸ்ஸில் இருந்து காப்பி அடித்து இருக்கிறார். அவர் வைக்கும் பிரேம்கள் எல்லாம் அப்படி தான் இருக்கிறது என்று கேலி செய்து இருந்தார்.

ஒளிப்பதிவாளர் பதிலடி :

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட், தான் ஒளிப்பதிவு செய்த திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தையும் இந்த படத்தையும் ஒப்பிட்டு, கடந்த 7 ஆண்டுகளில் நான் டெக்கனிகள் ரீதியாக முன்னேறி இருக்கிறேன் என்று நம்புகிறேன். உங்களுக்கு என் வேலை பிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை. எல்லாருக்கும் நல்ல ரசனை இருக்காது என்று பதிவிட்டுள்ளார். இதற்கு ட்விட்டர் வாசி ஒருவர் அஸ்வின் புகைப்படத்தை பார்த்து ‘இவன் மூஞ்ச பாத்தாலே வெறுப்பா இருக்கு’ என்று கமன்ட் செய்ய அதற்கு ரிச்சர்ட், இந்த படத்தை ப்ரொமோட் செய்ய இந்த பதிவு அல்ல. என் வேலையை குறை சொன்ன ஒரு திமிர்பிடித்த விமர்சகருக்கு தான் என்று கூறியுள்ளார்.

Advertisement