அதர்வா 100 படத்திற்கு தடை.! ஜெய் படத்தால் வந்த சிக்கல்.!

0
1617
Atharva
- Advertisement -

அதர்வா, ஹன்சிகா நடித்து சான் ஆண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’நூறு’ திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த படத்தை எனக்கு இன்னோரு பெரு இருக்கு படத்தை இயக்கிய சாம் ஆண்டான் இயக்கி வந்தார்.

-விளம்பரம்-
Image result for atharva 100

இந்த படம் வரும் மே 3ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை தயாரித்துள்ள எம்.ஜி.ஆரா சினிமாஸ் நிறுவனம், பலூன் படத்தை வெளியீட்டு உரிமைக்காக தரவேண்டிய ஒரு கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதாகவும், அத்தொகையை தராமல் நூறு படத்தை வெளியிட தடை விதிக்க கோரி 70 எம் எம் எண்டர்டய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குப்தொடரப்பட்டது.

- Advertisement -

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், நூறு படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மனுவுக்கு எம் ஜி ஆரா சினிமா நிறுவன இயக்குனர் மகேஷ், காவ்யா வேணுகோபால் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 17 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

விரைவில், இந்த விவகாரம் தொடர்பாக ‘நூறு’ படக்குழுவினர் செய்தியாளர்களை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இருதரப்புக்கு இடையே சுமூகம் ஏற்பட்டு, ‘நூறு’ திரைப்படம் திட்டமிட்டப்படி மே 9ம் தேதி வெளிவரலாம் என சினிமா வட்டாரங்கள் தகவல் கூறுகின்றன

-விளம்பரம்-
Advertisement