விஜய்க்காக 26 வயது நடிகையை Ok செய்த அட்லீ..! யார் தெரியுமா..? Vijay-63 Update.!

0
1572
Atlee
- Advertisement -

விஜய்யின் 63-வது படத்தை இயக்கவிருக்கிறார், அட்லி. ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களுக்குப் பிறகு மீண்டும் இணைகிறது, இந்தக் கூட்டணி.ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படத்தின் மூலம் மீண்டும் இணைகிறார்கள், நடிகர் விஜய் – இயக்குனர் அட்லி.

-விளம்பரம்-

vijay and atlee

- Advertisement -

இந்த படத்தில் பணியாற்றும் கலைஞர்கள் யார் என்பது போன்ற தகவல்கள் வெளியாகாத நிலையில் இந்த படத்தை பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு இசைபுயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தில் “கியரா அட்வானி” நடிக்கவுள்ளாராம்.

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான “தோனி தி அன் டோல்ட் ஸ்டோரி ” என்ற படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த கியரா அட்வானிக்கு தற்போது முதல் தமிழ் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கிசுகிசுக்க படுகிறது. இந்த தகவலை பிரபல பத்திரிகை ஒன்று விசாரித்தபோது, கியரா அத்வனி இந்த படத்தில் அவரை ஹீரோயினாக கமிட் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக கூறியுள்ளார்.

-விளம்பரம்-

Kiara-Advani

26 வயதே ஆனா கியரா அத்வானி, இந்தியில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான “புக்லி ” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் ‘தோனி,மெஷின் ‘ போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ‘பாரத் அனே நேனு ‘ என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமான இவர், தற்போது தமிழில் தனது முதல் படத்திலேயே தளபதியுடன் நடிக்கும் ஜாக்கபாட் அடிக்குமா என்று காத்துக்கொண்டிருக்கிறார்.

Advertisement