மீண்டும் கதை திருட்டில் சிக்கிய அட்லீயின் ஜவான் படம் – இந்த முறை பாரதிராஜா கதையா?

0
629
Atlee
- Advertisement -

அட்லீயின் ஜவான் படம் பாரதிராஜா உடைய பட கதை என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக அட்லீ திகழ்ந்து வருகிறார். இவர் மதுரையை சேர்ந்தவர். இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் திரைக்கதை, எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார். இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருந்தார். இதில் விஜய்யை வைத்து முதலாக தெறி படத்தை இயக்கி இருந்தார். ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி இந்த படம் ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக இருந்ததால் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. பின் அட்லீ மெர்சல் படத்தை இயக்கி இருந்தார்.

- Advertisement -

விஜய்-அட்லீ படம்:

இளைய தளபதியாக இருந்த விஜய் தளபதி விஜய் ஆக ஆனதே மெர்சல் படத்திற்குப் பிறகு தான். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜயை வைத்து பிகில் என்ற படத்தை அட்லீ இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய் அவர்கள் ராயப்பன், மைக்கேல் என்று அப்பா – மகன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். படத்தில் மைக்கேல் கதாபாத்திரத்தை விட ராயப்பன் கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பேசப்பட்டு இருந்தது.

ஷாருக்கான்-அட்லீ படம்:

இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார். பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார். இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த படம் அதிரடி, ஆக்சன் கதைக்களத்தை கொண்டது.

-விளம்பரம்-

ஜவான் படம் குறித்த தகவல்:

இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு ஜவான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தில் சஞ்சய் தத், தீபிகா படுகோன் ஆகியோர் கௌரவ வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகின்றன. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படம் ஜூன் 5-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் அட்லீயின் ஜவான் பட கதை பாரதிராஜா உடையது என்ற தகவல் தற்போது இணையத்தில் வைலாகி வருகிறது.

கதை திருட்டு சம்பவம்:

பாரதிராஜா இயக்கத்தில் கமல் அவர்கள் அப்பா- மகனாக நடித்த ஒரு கைதியின் டைரி படத்தின் கதையை மையமாக வைத்து தான் தற்போது அட்லீ ஜாவன் படத்தை இயக்கி வருகிறார் என்று கூறப்படுகிறது. ஜவான் படத்தில் ஷாருக்கான் அவர்கள் அப்பா- மகன் என்று இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு தான் விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தில் கதையை அட்லி இயக்குகிறார் என்று செய்திகள் பரவிருந்தது. அதேபோல் Darkman படத்தின் காப்பி தான் ஜவான் திரைப்படம் என்று கூறி இருந்தார்கள். இப்படி ஜவான் படம் பிற படத்தினுடைய காப்பி என்று பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. படம் வந்த பின்னால் தான் எது உண்மை என்று தெரிய வரும்.

Advertisement