‘ஜவான்’ படம் என்னுடைய படத்தின் கதை – அட்லீ மீது புகார் அளித்த விஜயகாந்த் பட தயாரிப்பாளர். அதுவும் எந்த படம் பாருங்க.

0
449
jawan
- Advertisement -

ஜவான் படம் விஜயகாந்த் படத்தின் கதை என்று அட்லீ மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக அட்லீ திகழ்ந்து வருகிறார். இவர் மதுரையை சேர்ந்தவர். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் திரைக்கதை, எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார்.

-விளம்பரம்-

இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருந்தார். இதில் விஜய்யை வைத்து முதலாக தெறி என்ற படத்தை இயக்கி இருந்தார். ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி இந்த படம் ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக இருந்ததால் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.

- Advertisement -

விஜய்-அட்லீ படம்:

பின் அட்லீ மெர்சல் படத்தை இயக்கி இருந்தார். இளைய தளபதியாக இருந்த விஜய் தளபதி விஜய் ஆக ஆனதே மெர்சல் படத்திற்குப் பிறகு தான். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜயை வைத்து பிகில் என்ற படத்தை அட்லீ இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய் அவர்கள் ராயப்பன், மைக்கேல் என்று அப்பா – மகன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். படத்தில் மைக்கேல் கதாபாத்திரத்தை விட ராயப்பன் கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பேசப்பட்டு இருந்தது.

ஷாருக்கான்-அட்லீ படம்:

இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார். பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார். அதோடு அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

ஜவான் படம்:

மேலும், இந்த படம் அதிரடி, ஆக்சன் கதைக்களத்தை கொண்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு ஜவான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் ஜவான் படத்தின் கதை விஜயகாந்த் படத்தின் கதை என்ற சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, விஜயகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த படம் பேரரசு.

அட்லீ மீது புகார்:

இந்த படத்தின் கதை தான் ஜாவான் படத்தின் கதை என பேரரசு படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார். மேலும், இவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வருகிற ஒன்பதாம் தேதிக்கு மேல் விசாரணை நடத்த இருப்பதாகவும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முடிவெடுத்து இருக்கின்றனர். அதோடு ஏற்கனவே அட்லீ என்றால் காப்பி என்ற சர்ச்சை சோசியல் மீடியாவில் இருக்கிறது. அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படம் மௌனராகம் படம், மெர்சல் படம் மூன்று முகம் படம் என்று விமர்சித்து இருந்தார்கள். இதனை தொடர்ந்து தற்போது ஜவான் படத்திற்கும் சர்ச்சை எழுந்திருக்கிறது.

Advertisement