சிறு வயதில் அஜித் மடியில் அமர்ந்து புகைப்படம் எடுத்துள்ள வெற்றிமாறன்,பா ரஞ்சித் பட ஹீரோ – யார் தெரியுதா ?

0
2545
- Advertisement -

அஜித் இளம் வயதில் இருக்கும் போது அவர் மடியில் உட்கார்ந்து இருக்கும் நடிகர் குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். தமிழ் சினிமாவில் அஜித் அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவு பெற்று இருக்கிறது. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் வலிமை படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. ஆனால், விமர்சன ரீதியாக இந்த படம் தோல்வியடைந்தது. , வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்தை எடுத்து இருக்கிறார்கள். இந்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் ஜனவரி 11ஆம் தேதி வெளியானது.

- Advertisement -

துணிவு படம்:

இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, சதிஷ், பாவனி, அமீர் போன்றவர்கள் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படத்தை ரெட் ஜென்ட்ஸ் நிறுவனம் திரையரங்குளில் வெளியிட்டது. இப்படம் விமர்சன ரீதியாக வெற்றியடைந்து விட்டது என்று கூட கூறியிருந்தனர். அதோடு இந்த படம் தமிழகத்தில் மட்டும் 135 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அஜித் அவர்கள் ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார்.

ஏகே 62 படம்:

இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது. அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியிருந்தது. பின் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. அதன் பின் அஜித்தின் ஏகே 62 படத்தை மகிழ்திருமேனி இயக்க இருப்பதாக அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியானது. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஏகே 62 படத்தின் தலைப்பின் முதல் பார்வை வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு விடாமுயற்சி என்று டைட்டில் வைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அஜித்தின் பைக் ரைட்:

ஆனால் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு எப்போது? எங்கு தொடங்கும்? என்ற தகவல் இன்னும் தெரியவில்லை. தற்போது அஜித் பைக் ரைட்டில் இருக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் பைக்கில் பயணம் செய்து கொண்டிருக்கிறார் அஜித். அஜித்தின் பைக் ட்ரிப் புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி இருக்கிறது. சமீபத்தில் நடிகர் அஜித் நேபாளத்தில் பைக்கில் சுற்றிய வீடியோக்கால் வைரலானது. ஆனால், விடாமுயற்சி படம் குறித்த அப்டேடுக்காக ரசிகர்கள் பலருமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

வைரலாகும் புகைப்படம்:

இந்த நிலையில் அஜித்தின் இளம் வயது புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, அந்த புகைப்படத்தில் அஜித் இளம் வயதில் இருக்கிறார். அதில் அஜித்தின் மடியில் ஒரு சிறுவன் உட்கார்ந்திருக்கிறார் . அவர் வேறு யாரும் இல்லைங்க, அட்டகத்தி பட நடிகர் தினேஷ் தான். திணேஷ் தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement