இந்த மாசம் விஜய்க்கு ரொம்ப ஸ்பெஷல் - தொடர்ந்து 3 நாள் கொண்டாட்டம் தான். அப்படி என்ன தெரியுமா ?

By Rajkumar · 4/8/2020

தமிழ் சினிமாவில் இளைய தளபதி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திற்காகத்தான் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். விஜய் பற்றி அக்குவேறு ஆணிவேராக அவரது ரசிகர்கள் அறிவார்கள். ஆனால் விஜயை பற்றி அறியாத சில விஷயங்களும் இருக்கத்தான் செய்கிறது அப்படி ஒரு சிறப்பான விஷயம் தான் இந்த தகவலும்.

இந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் விஜய்க்கு மிகவும் ஸ்பெஷலான ஒரு மாசம் தான் காரணம் விஜய் வீட்டில் இந்த மாதத்தில் நான்கு கொண்டாட்டங்கள் இருக்கிறது. அதில் முதல் கொண்டாட்டம் என்னவென்றால் இந்த மாதம் தான் விஜய்யின் அம்மாவிற்கு பிறந்தநாள். ஆம், நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா கடந்த 1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி தான் பிறந்தார்.

இதையும் பாருங்க : சேது மீண்டும் பிறந்திருக்கார் - ஆனந்த கண்ணீரில் திளைக்கும் குடும்பத்தினர்.

இதை அடுத்து விஜய்க்கும் இந்த மாசம் மற்றொரு கொண்டாட்டம் இருக்கிறது அது என்னவென்றால் அவரது திருமண நாள்.நடிகர் விஜய் சங்கீதாவை கடந்த 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி தான் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இன்னொரு விசேஷம் என்னவென்றால் விஜய்யின் மகனான சஞ்சய் இந்த மாதம் தான் பிறந்தார். அதாவது ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி 2000 ஆண்டு தான் சஞ்சய் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/ActorVijayTeam/status/1166197468880457728

இவை அனைத்திற்கும் மேலாக நடிகர் விஜய்க்கு டாக்டர் பட்டம் கிடைத்ததும் இந்த மாதம்தான். ஆம், கடந்த 2007ஆம் ஆண்டு நடிகர் விஜய்க்கு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டத்தை ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி தான் வழங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இந்த மாதம் கொண்டாட விஜய்க்கு நான்கு காரணங்கள் இருப்பது தான் இந்த மாதம் விஜய்க்கு ஒரு ஸ்பெஷலான மாதம் என்று கருதப்படுகிறது

behindtalkies AMP · Quick view
View full