-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

சேது மீண்டும் பிறந்திருக்கார் – ஆனந்த கண்ணீரில் திளைக்கும் குடும்பத்தினர்.

0
3853
sethu

தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகரும் மருத்துவருமான சேது ராமன்கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு மாரடைப்பால் காலமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவர் சந்தானத்தின் மூலம் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பின்னர் வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 போன்ற படங்களில் கதாநாயகனாகவும் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் சேது ராமன்.

-விளம்பரம்-
sethuraman

டாக்டர் சேதுராமன் அண்ணா பல்கலைக்கழகத்தில் சரும நிபுணர் எனப்படும் dermatology என்ற துறையில் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். மேலும், கடந்த 2016ஆம் ஆண்டு சொந்தமாக ஒரு தோல் நோய் மருத்துவமனை ஒன்றை திறந்தார். இதில் சந்தானம் பாபிசிம்ஹா நிதின் சத்யா வெங்கட்பிரபு என்று பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.

இதனைத்தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி அண்ணா நகரில் தனது இரண்டாவது மருத்துவமனையையும் திறந்தார் சேதுராமன்.மருத்துவர் மற்றும் நடிகர் என்று இரண்டு துறையில் இருந்து வந்த டாக்டர் சேதுராமன் கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி உமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஹானா என்ற பெண் குழந்தையும் இருக்கிறார்.

-விளம்பரம்-

சேதுராமன் இறந்த போது அவரது மனைவி உமா கர்ப்பமாக இருந்தார். இப்படி ஒரு நிலையில் உமாவிற்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள சேதுராமனின் தந்தை விஸ்வநாதன் சேதுராமன், சேதுவிற்கு ஒமகன் பிறந்திருக்கிறான். தாயும் சேயும் நலம் என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news