அட , அவன் இவன் பட Highnessன் மனைவி இந்த ரஜினி பட நடிகை தானா – அதுவும் காதல் திருமணமாம்.

0
1289
Gmkumar
- Advertisement -

அவன் இவன் படத்தில் நடித்த நடிகர் ஜமீன்தார் ஐனஸின் மனைவி புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. ஜமீன்தார் ஐனஸ் என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் ஜி எம் குமார். இயக்குனர் பாலா இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் கொடுத்த படம் அவன் இவன். இந்த படத்தில் விஷால், ஆர்யா, ஜனனி ஐயர், மதுஷாலினி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் ஜமீன்தார் ஐனஸ் என்ற கதாபாத்திரத்தில் ஜிஎம் குமார் நடித்திருந்தார். இந்த படமே இவரை மையமாக வைத்து தான் கதை நகர்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இருந்தாலும் இவர் இதற்கு முன்பு பல படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய முழு பெயர் கோவிந்தராஜ் மனோகரன் குமார். இவர் சென்னையை சேர்ந்தவர். இவர் சினிமா உலகில் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகங்கள் கொண்டவர். 1986 ஆம் ஆண்டு சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு நடித்த அறுவடை நாள் என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

- Advertisement -

ஜி. எம். குமார் திரைப்பயணம்:

இதனைத் தொடர்ந்து இவர் பிட்பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் போன்ற பல படங்களை இயக்கியிருந்தார். பின் இவர் 1993 ஆம் ஆண்டு கேப்டன் மகள் என்ற படத்தின் மூலம் நடிகராக ஆனார். அதன் பின் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். ஆனால், இவர் இயக்கி, தயாரித்த பல படங்கள் தோல்வியைத் தழுவி நஷ்டத்தை ஏற்படுத்தி இருந்தது.

ஜி. எம். குமார் நடித்த படங்கள்:

இதனால், இவர் சிலகாலம் சினிமா பக்கமே வராமல் இருந்தார். பின் வெயில் படம் இவருடைய சினிமாவிற்கு ஒரு திருப்புமுனையை கொடுத்தது. அதற்கு பின் தொடர்ந்து இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். மலைக்கோட்டை, மச்சக்காரன், குருவி, மாயாண்டி குடும்பத்தார், தாரதப்பட்டை, சரவணன் இருக்க பயமேன் போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று உள்ளார்.

-விளம்பரம்-

நடிகர் ஜி. எம். குமார் குடும்பம் பற்றிய தகவல்:

கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த கர்ணன் என்ற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் குமார் நடித்திருந்தார். இந்நிலையில் இவருடைய மனைவி குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அதுஎன்னவென்றால், நடிகை குமார் அவர்கள் தன் முதல் படத்தில் நடித்த நடிகை பல்லவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை பல்லவியும் 90 காலகட்டத்தில் மிகப் பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.

வைரலாகும் ஐனஸ் மனைவியின் புகைப்படம்:

சொல்லப்போனால் அப்போது இருந்த ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகையாக இருந்தார் பல்லவி. அதற்குப் பின் இவர் சினிமாவில் அவ்வளவாக நடிக்கவில்லை. இந்நிலையில் தற்போது நடிகர் குமார் மற்றும் அவருடைய மனைவி பல்லவியின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் நம்ம ஐனஸுக்கு இவ்வளவு அழகான மனைவியா! என்று வியந்து கமெண்டுகளை போட்டும், புகைப்படத்தை ட்ரெண்டிங் ஆக்கியும் வருகிறார்கள்.

Advertisement