அவ்வை சண்முகி பட குழந்தை நடிகை தனுஷின் இந்த படத்தில் நடிக்கவிருந்தாரா? அது என்ன படம்னு பாருங்க.

0
1333
avvai

கெத்து காட்டும் ஹீரோக்கள், க்யூட் ரியாக்‌ஷன்களால் மனசை அள்ளும் ஹீரோயின்களைத் தாண்டி சில ஃப்ரேம்களில் ஆதிக்கம் செலுத்துவார்கள் குட்டி நட்சத்திரங்கள். பெருசுகளையே கலாய்க்கும் கவுன்ட்டர் டயலாக்காக இருந்தாலும் சரி, பார்க்கும் எல்லாரையும் கண் வியர்க்க வைக்கும் சென்டிமென்ட் காட்சிகளாக இருந்தாலும் சரி, அடடே இந்தச் சுட்டி செமையா நடிக்குதே!’ என நம்மை ஓ போட வைத்த அவ்வை ஷண்முகி பட குழந்தை நட்சத்திரம் இப்போது எப்படி இருக்கிறார்கள் என ரிவர்ஸ் கியர் போட்டுப் பார்ப்போம்.

Ann Alexia Anra Wiki, Biography, Age, Family, Movies, Images & More -  wikimylinks

உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் எப்போதும் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு வித்தியாசமான கெட்டப்பில் என்ட்ரி கொடுப்பார். அந்த வகையில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “அவ்வை சண்முகி” இந்த படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கினார். இந்தப் படத்தில் கமல்ஹாசன், மீனா, நாகேஷ், ஜெமினி கணேசன் உட்பட பலர் நடித்து இருந்தனர்.

- Advertisement -

இந்த படம் ராபின் வில்லியம்ஸ் நடித்த மிசஸ் டவுட்ஃபயர் என்னும் ஆங்கிலப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது ஆகும்.இந்த படத்தில் பளீர் வெள்ளை நிறம், பால் நிற சிரிப்பு என உலக நாயகனின் மகளாய் அசரடித்த குட்டி தேவதைதான் தற்போது அடையாளம் தெரியாமல் வளர்ந்துவிட்டார். அவ்வை ஷண்முகி படத்திற்கு பின் நிறைய வாய்ப்புகள் வந்தாலும் ஏனோ சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.

Trisha was initially signed to play Taapsee Role In Aadukalam

பத்திரிகைகளில் எழுதுவது, அழகிப் போட்டிகளில் கலந்துகொள்வது எனத் தன்னை பிஸியாகவே வைத்திருந்தவர் இப்போது மாடலிங்கில் பிஸி. இப்படி ஒரு நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான படம் ஆடுகளம். இந்த படத்தில் ஐரீன் கதாபாத்திரத்தில் த்ரிஷாவை தொடர்ந்து இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படுள்ளது. ஆனால் அந்த வாய்ப்பை இவர் நிராகரித்து விட்டாராம்.

-விளம்பரம்-
Advertisement