அயலான் படத்தில் ஏலியனாக நடித்துள்ளது யார் தெரியுமா ? வெளியான புகைப்படம் இதோ.

0
2390
- Advertisement -

அயலான் படத்தில் ஏலியனாக நடித்திருக்கும் நபர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து இருந்த டாக்டர், டான் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. இதை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த பிரின்ஸ் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. அதன் பின் கடைசியாக சிவகார்த்திகேயன் அவர்கள் மாவீரன் என்ற படத்தில் நடித்து இருந்தார்.

- Advertisement -

மாவீரன் படம்:

இந்த படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து இருந்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளிவந்து இருந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்தார். அனைவரும் எதிர்பார்த்த மாவீரன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று பாக்ஸ் ஆபிசில் இடம் பிடித்து இருக்கிறது.

அயலான் படம்:

இதை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் அயலான். இந்த படத்தை ஆர் ரவிக்குமார் இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, ரகுல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படம் கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக உருவாக்கப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்:

ஒரு வழியாக இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஏலியனை மையப்படுத்தி இந்த படத்தை இயக்குனர் எடுத்து இருக்கிறார். எம்ஜிஆருக்கு பிறகு இந்த ஏலியன் படத்தை சிவகார்த்திகேயன் எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தினுடைய டீசர் வெளியாகியிருக்கிறது. இந்த டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், தீபாவளிக்கு அயலான் படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று சொல்லியிருந்தோம். ஆனால், படத்தில் இன்னும் சின்ன சின்ன வேலை இருப்பதால் பொங்கலுக்கு தள்ளி வைத்திருக்கிறோம் என்று கூறி இருந்தார்.

ஏலியனாக நடித்த நடிகர்:

அதோடு நிறையவே வி எப் எக்ஸ் காட்சிகள் மெனக்கட்டு இந்த படத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க பலருமே இந்த படத்தில் ஏலியனாக நடித்த நடிகர் யார்? என்று பலருக்குமே தெரியாது. இந்த நிலையில் இந்த படத்தில் ஏலியனாக நடித்த நடிகர் குறித்த தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அவர் பெயர் வெங்கட் செங்குட்டவன். இவர் ஏற்கனவே காம்ப்ளக்ஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை மந்திரம் வீரபாண்டி இயக்கியிருக்கிறார். ஆனால், இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. தற்போது இவர் நடித்திருக்கும் படம் அயலான். இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement