அப்போது அமெரிக்காவில் நயன்தாராவும்,விக்னேஷ் சிவனும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை விக்னேஷ் சமூகவலைத்தளத்தில் பதிவேற்றினார். அது அப்போது வைரலானது.
அதேபோல தற்போது ஆஸ்கர் விருது விழா நடைபெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்துக்கு இருவரும் சென்றிருக்கிறார்கள். அங்கு இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ட்விட்டரில் பதிவேற்றியுள்ளார் விக்னேஷ் சிவன்.
இம்முறையும் இருவரும் நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாக தொடங்கியுள்ளது. "வாழ்றான்டா விக்னேஷ் சிவன்" என்கிற நயன்தாரா ரசிகர்களின் மைன்ட்வாய்ஸ் சற்று அதிகமாகவே இம்முறை காதில் விழுகின்றது.




