நீச்சல் உடையில் ஹீரோவுடன் ரொமான்ஸ். ஐஸ்வர்யா ராஜேஷா இப்படி நடிச்சிருக்காரு. வீடியோ இதோ.

0
19295
Aishwarya-Rajesh
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். சிவகார்த்திகேயனை போல சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவரில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். ஆரம்பத்தில் காமெடி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் பின்னர் மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார். ஆனால், இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானது என்னவோ, 2010 ஆம் ஆண்டு வெளியான ‘நீதான அவன்’ என்ற படத்தின் மூலம் தான். ஆரம்பத்தில் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. பின்னர் இவருக்கு ரம்மி, பண்ணையாரும் பத்மினி போன்ற படங்கள் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

- Advertisement -

பின்னர் இந்த இளம் வயதிலேயே அம்மாவாகவும், ஹீரோவின் தங்கையாகவும் நடித்தது ஐஸ்வர்யா ராஜேஷ் தான் என்பது வியப்பான விஷயம் தான். தற்போது லீட் ரோலில் நடிக்கும் அளவிற்கு ஒரு டாப் ஹீரோயினாக மாறியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், இடையில் சட்டப்படி குற்றம் என்ற படத்தில் கவர்ச்சியாக நீச்சல் உடை அணிந்து நடித்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஆனால், ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை எந்த படத்திலும் இப்படி கவர்ச்சியாக நடித்தது இல்லையே என்று ரசிகர்கள் ஷாக் அடைந்து உள்ளனர். ஏற்கனவே ஐஸ்வர்யா ராஜேஷ், கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘போதை காதல்’ என்ற குறும்படத்தில் நடித்திருந்தார். அந்த குறும்படத்தில் நெருக்கமான ரொமான்டிக் காட்சிகளிலும், லிப் லாக் காட்சிகளிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement