காலை 6 மணிக்கு போனேன் அடுத்த நாள் காலை 2 மணிக்கு தான் கூப்பிட்டாங்க - ஆயுத எழுத்து சீரியல் நடிகர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கும் சீரியல் தான் “ஆயுத எழுத்து”. ஆயுத எழுத்து சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அம்ஜத் கான். இந்த சீரியல் வந்த கொஞ்ச நாட்களிலேயே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் அம்ஜித், ஸ்ரீத்து இருவருமே திடீரென விலகி விட்டார்கள். அதனால், அவர்களுக்கு பதிலாக தற்போது ஆனந்த் மற்றும் சரண்யா சுந்தராஜ் தற்போது நடிக்கிறார்கள். நடிகர் அம்ஜத்துக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் வந்து உள்ளதால் தான் ஆயுத எழுத்து சீரியலில் விலகி உள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.
இவர் சின்னத்திரை சீரியலில் நடிப்பதற்கு முன் சினிமாவில் சில படங்களில் நடித்து உள்ளார். இவர் 2010 ஆம் ஆண்டு வெளியான புகைப்படம் என்ற திரைப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து வல்லினம், மாயா, நட்பதிகாரம், நெடுநல்வாடை உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். சமீபத்தில் கூட லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளி வந்த "கைதி" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அம்ஜித் கான் நடித்து இருந்தார். மேலும், இந்த படம் மிகப் பெரிய அளவில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் அம்ஜித் கான் அவர்கள் வல்லினம் படத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் பாருங்க : குருவி 150 நாள் ஓடிச்சுனு சொல்றாங்க, உண்மையா? கலாய்த்த நடிகர், கை வைத்து சிரிப்பை அடக்கிய தனுஷ். வைரலாகும் வீடியோ.
2014 ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ்த் திரைப்படம் தான் வல்லினம். இந்த படம் முழுக்க முழுக்க விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். இந்த படத்தை எழுதி, இயக்கியவர் அறிவழகன். மேலும், இந்த படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் அவர்கள் தயாரித்து உள்ளார். இந்த படத்தில் நகல், மிருதுளா பாஸ்கர், அதுல் குல்கர்னி, அம்ஜத் கான், ஜெகன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். உலகில் கிரிக்கெட் விளையாட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு சிறு பகுதியையாவது கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு கொடுங்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த கதை அமைந்து உள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க கூடைப்பந்து விளையாட்டை மையமாக வைத்து இயக்கியதாகும். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது.
இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க அம்ஜித் கான் அவர்கள் மிகப்பெரிய அளவில் கஷ்டப்பட்டார் என்று சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் கூறியிருக்கிறார். இந்த வல்லினம் படத்தில் நடிப்பதற்கு அம்ஜித் கான் வாய்ப்பு கேட்டு சென்று உள்ளார். அப்போது அவர் காலை 6 மணிக்கு போனர். ஆனால், அடுத்த நாள் காலையில் 2 மணிக்கு தான் அவரை உள்ளே நடிக்க கூப்பிட்டார்கள். அந்த அளவிற்கு சினிமா படத்தில் நடிக்கும் போது அவருக்கு பல சோகங்கள் நிகழ்ந்து உள்ளது. தற்போது நடிகர் அம்ஜித் கான் அவர்கள் இக்லூ என்ற படத்தில் நடித்து உள்ளார். அதோடு நடிகர் அம்ஜித் கான் சினிமா படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்ற தகவல் வந்துள்ளது.