குருவி 150 நாள் ஓடிச்சுனு சொல்றாங்க, உண்மையா? கலாய்த்த நடிகர், கை வைத்து சிரிப்பை அடக்கிய தனுஷ். வைரலாகும் வீடியோ.

0
84671
Asuran
- Advertisement -

ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களுக்கு அடுத்து தனுஷ்– வெற்றிமாறன் இணைந்து உருவாக்கிய படம் தான் “அசுரன்”. சமீபத்தில் தான் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன் ‘ திரைப்படம் அமோக வெற்றி பெற்றது. இந்த படத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ்ராஜ், பசுபதி, பாலாஜி, சக்திவேல், சுப்ரமணிய சிவா, யோகி பாபு, குரு சோமசுந்தரம் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். இந்த படம் பூமணி எழுதிய “வெக்கை” என்ற நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கிய படமாகும். கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளது. மேலும், இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் ஜி.வி. பிரகாஷ் அவர்கள் இசையில் வெளிவந்தது.

-விளம்பரம்-

- Advertisement -

இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளது. அதுமட்டுமில்லாமல் தனுஷ் நடிப்பில் வெளி வந்த படத்திலேயே இந்தப் படம் தான் அதிக வசூல் செய்தது. இந்நிலையில் இந்த படத்தின் 100-வது நாள் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழா சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் தனுஷ், வெற்றி மாறன், படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள். அப்போது நடிகர் பவன் அவர்கள் விழாவில் பேசியது அனைவரையும் பதற வைத்தது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான துணை நடிகர்களில் பவனும் ஒருவர். இவர் எண்ணற்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து உள்ளார். இவர் தமிழில் பொல்லாதவன், செங்காத்து பூமியிலே, தகராறு, குருவி, பீமா, வீரம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார்.

இதையும் பாருங்க : 7 ஆம் அறிவு பட நடிகையின் மகளுக்கு திருமணம். மாப்பிள்ளை இவர் தான் .

இவர் பொல்லாதவன் படத்தில் அவுட் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். விழாவில் அதில் அவர் பேசியது, அசுரன் படத்தில் நான் நடித்தது மிகவும் பெருமையாக உள்ளது. பொதுவாகவே திரைப் படங்கள் நூறு நாட்கள் தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக ஓடுவது என்பது அரிதான ஒன்று. கடைசியாக நான் நடித்த குருவி திரைப்படம் 150 நாட்கள் ஓடியது என்று வெற்றி விழாவிற்கு நான் சென்றிருந்தேன். ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்கு தெரியவில்லை என்று கூறினார். இவருடைய பேச்சை கேட்டு அரங்கமே சிரிப்பொலியில் சிரிக்க ஆரம்பித்தது.

-விளம்பரம்-

அது மட்டுமில்லாமல் எதிர்பாராத விதமாக நடிகர் தனுஷ் அவர்கள் பவன் கூறியதை கேட்டு சிரிப்பை அடக்கமுடியாமல் மேடையிலேயே சிரித்து விட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அது மட்டுமில்லாமல் இதனை அஜித் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். நடிகர் பவன் அவர்கள் விஜயுடன் குருவி படத்தில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய் ரசிகர்கள் எல்லோரும் எந்த அளவிற்கு கொந்தளிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.

Advertisement