விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழனுக்கு உள்ளுக்குள் கவலை இருந்தாலும் வெளியில் காண்பிக்காமல் சரி என்று சம்மதித்தார். மறுநாள் காலையில் எல்லோருமே அவரவர்கள் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது பாண்டியன், வானதி பேசியதை பற்றி யோசித்து கொண்டு இருந்தார். பாண்டியன் போன் செய்தும் வானதி எடுக்கவில்லை. அதற்குப்பின் நிலா-சோழன் இருவருமே சந்தா வீட்டில் பேச போவதற்கு தயாரானார்கள். அப்போது பாண்டியன் கவலையில் இருப்பதை அறிந்த நிலா அவரிடம் விசாரித்தார். ஆனால், பாண்டியன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

பாண்டியன், சேரன் அண்ணனுக்கு கல்யாணம் நடக்கணும். அது மட்டும் இல்லாமல் எனக்கும் வானதிக்கும் கல்யாணத்திற்கு பிறகு செட் ஆகுமா? தெரியவில்லை. எல்லாம் யோசித்து தான் முடிவு எடுக்கணும். கல்யாணத்தை நினைத்தால் குழப்பமாக இருந்தது. அதனால் தான் என்னால் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியவில்லை என்றார். நிலா, வானதி வீட்டில் பிரஷர் கொடுப்பார்கள். அதனால் தான் வானதி கோபப்பட்டார். எதுவாக இருந்தாலும் யோசித்து முடிவெடுங்கள். ரெண்டு பேரும் புரிந்து கொள்ளுங்கள் என்று சொன்னார். அதற்குப்பின் நிலா- சோழன் இருவரும் சந்தாவின் வீட்டிற்கு போனார்கள்.
அய்யனார் துணை:
அப்போது நிலா, சேரனுக்கு சந்தாவை திருமணம் செய்து வைப்பது பற்றி பேசி இருந்தார். சந்தா ரொம்பவே சந்தோஷப்பட்டார். அனிஷ், திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார். அதோடு தன்னுடைய பெற்றோர்கள் திருமணத்திற்கு ஒத்துக்க மாட்டார்கள் என்பதால் சென்னையிலேயே திருமணத்தை முடித்து விடலாம் என்றார். இன்னொரு பக்கம் பாண்டியன், வானதி கடைக்கு வராததால் ரொம்ப வருத்தப்பட்டார். பின் வானதிக்கு பாண்டியன் போன் செய்தார். வானதி, பாண்டியனை பிளாக் செய்து வைத்தார். வேறொரு மொபைலில் இருந்து பாண்டியன், வானதிக்கு போன் செய்தார். பாண்டியன் குரலை கேட்டவுடன் வானதி ஃபோனை வைத்து விட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அனீஸ், சோழன்- நிலா இருவரும் திருமணத்தைப் பற்றி பேசுவதற்கு தங்கள் வீட்டிற்கு வந்ததை சொல்கிறார். சேரனுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. அனீஸ், எங்களுக்கு திருமணத்தில் முழு சம்மதம். சென்னையிலேயே நடத்திக் கொள்ளலாம் என்கிறார். சேரன் அமைதியாகவே இருக்கிறார். இன்னொரு பக்கம் ராகவ், நீங்கள் வேறொரு இடத்தில் வேலை தேடுகிறீர்களா? என்கிறார். நிலா, ஆமாம் என்று சொல்கிறார். ராகவ், எதற்காக இப்படி செய்கிறீர்கள். நான் ஒர்க் எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட் தரவில்லை என்றால் உங்களால் எங்கும் வேலை பார்க்க முடியாது என்கிறார். நிலா, எனக்கு நியாயமாக தரவேண்டிய சர்டிபிகேட் நீங்கள் தரவில்லை என்றாலும் என்னுடைய திறமைக்கு வேலை கிடைக்கும்.

சீரியல் ட்ராக்:
இனிமேல் இங்கு என்னால் வேலை செய்ய முடியாது என்கிறார். ராகவ், வேலை இல்லாமல் நீ என்ன கிழிக்கிறாய் என்று பார்க்கிறேன் என்கிறார். இன்னொரு பக்கம் வானதியை பார்க்க பாண்டியன் வீட்டிற்கு வருகிறார். வானதி கண்டு கொள்ளவே இல்லை. இதை கவனித்த வானதியின் பெற்றோர்கள், இவர்கள் சீக்கிரத்தில் பிரிந்து விடுவார்கள். நல்ல ஒரு ஃபாரின் மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்துவிடலாம் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் வேலையை சோழனை பார்த்த நிலா, ஆபீஸில் நடந்ததை எல்லாம் சொல்லி எமோஷனலாக அழுகிறார். சோழனுமே அழுகிறார். பின் நிலாவிற்கு சோழன் ஆறுதல் சொல்கிறார்.






