விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், வானதி கர்ப்பமாகவே இல்லை. அவர்கள் வீட்டில் திருமண ஏற்பாடு செய்தார்கள். அதனால் தான் அவர் பொய் சொன்னார் என்று நடந்ததை எல்லாம் சொன்னார். பாண்டியன், என்னை ரொம்பவே பயமுறுத்தி விட்டாள் என்றெல்லாம் நடந்ததை சொல்லிக் கொண்டிருப்பதால் வீட்டில் உள்ள எல்லோருமே பாண்டியன் நிலைமை நினைத்து சிரித்தார்கள். இன்னொரு பக்கம் பாண்டியனை காதலிக்க கூடாது என்று அவருடைய பெற்றோர்கள் திட்டிக் கொண்டிருந்தார்கள்.

அதற்குப்பின் வானதி, சீக்கிரம் என்னை திருமணம் செய்து கொள் என்று சொன்னார். அதற்கு பாண்டியன், சேரன் அண்ணா திருமணமாகாமல் நான் செய்து கொள்ள மாட்டேன் என்றார். மறுநாள் காலையில் நிலா வேலைக்கு கிளம்ப தயாராக இருந்தார். அப்போது வந்த ராகவ், உங்கள் உடம்பு நன்றாக இருக்கிறதா? ஏன் வேலைக்கு வரவில்லை? என்று ரொம்ப அக்கறையாக பேசி இருந்தார். இதையெல்லாம் பார்த்து சோழனுக்கு பயங்கர கோபம் வந்தது. பின் ராகவை அடித்து கீழே தள்ளி சண்டை போட்டார். ஆனால், இதெல்லாம் சோழனுடைய கனவு. பின் தான் நிலாவின் புருஷன் என்று ராகவிடம் சொல்ல நினைத்தார் சோழன்.
அய்யனார் துணை:
இன்றைய எபிசோட்டில் சோழன், நிலா தான் தன்னுடைய மனைவி என்று ராகவிடம் சொல்லப் போகிறார். அதற்குள் நிலா- சேரன் எல்லோருமே வந்ததால் சோழனால் உண்மையை சொல்ல முடியவில்லை. அதற்கு பின் வானதி, சேரன் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வானதி, எங்கள் வீட்டில் ஒரே பிரச்சினையாக இருக்கிறது. நீங்கள் கல்யாணம் செய்து கொண்டால் தான் பாண்டியன் என்னை கல்யாணம் செய்து கொள்வேன் என்று சொல்கிறார். தயவுசெய்து நீங்கள் கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்கிறார். அதற்கு சேரன், நான் பாண்டியனிடம் பேசுகிறேன் என்கிறார். வானதி, நீங்கள் எவ்வளவு சொன்னாலும் பாண்டியன் கேட்க மாட்டான்.

இன்றைய எபிசோட்:
இதற்கு ஒரே வழி நீங்கள் சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்லிவிட்டு அங்கு இருந்து செல்கிறார். இதையெல்லாம் கேட்டு சேரனுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இன்னொரு பக்கம்
நிலா, பல்லவன், சோழன் மூவருமே பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருக்கிறார்கள். அப்போது பல்லவனை ஒரு பெண் பார்க்கும் விஷயத்தைப் பற்றி நிலா, சோழனிடம் சொல்கிறார். அதை கவனித்த சோழன், பல்லவனை பயங்கரமாக ஓட்டுகிறார். அதற்குப்பின் சேரன், தனக்கு தெரிந்த தரகரிடம் பெண் பார்க்கும் விஷயத்தைப் பற்றி சொல்கிறார்.
https://www.youtube.com/watch?v=0l1l9u5sR0k
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் நிலா, தன்னுடைய வீட்டில் தீபாவளி பண்டிகை எப்படியெல்லாம் கொண்டாடுவார்கள் என்று சொல்கிறார். இதைக் கேட்ட சோழன், சேரனிடம் சொல்லி தீபாவளியை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்கிறார். நிலா சொன்னது போலவே தீபாவளி ஏற்பாடுகள் எல்லாம் சோழன் செய்திருக்கிறார். இதை பார்த்து நிலா ரொம்ப சந்தோஷப்படுகிறார்.






