விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, சோழன் இருவரும் பத்திரத்தை எடுப்பதற்காக வீட்டிற்குள் போகணும் என்று திட்டம் போட்டார்கள். பின் கேட்டின் மீது ஏறி குதித்து நிலா-சோழன் உள்ளே சென்று விட்டார்கள். அதற்குப்பின் ஓட்டை பிரித்துக் கொண்டு சோழன் வீட்டுக்குள் இறங்கினார். நிலா வீட்டின் மீது பயத்திலேயே உட்கார்ந்து கொண்டிருந்தார். வீட்டிற்குள் சென்ற சோழன் எல்லா இடத்திலும் உயிலை தேடினார். ஆனால் எங்குமே கிடைக்கவில்லை.

சோழன் வீடு முழுக்க தேடினார். ஆனால், உயில் கிடைக்கவில்லை. இதனால் கோபத்தில் நிலா, நன்றாக தேடுங்கள் என்று கத்துகிறாள். பின் ஒரு வழியாக ஓரிடத்தில் இருந்த பையைத் திறந்து சோழன் பார்த்தார். உயில் கிடைத்து விட்டது. இதை சோழன் சொன்னவுடன் நிலா சந்தோஷப்பட்டார். பின் சோழன் வெளியே வந்து விட்டார். இருவரும் வீட்டின் கீழே இறங்குகிறார்கள். அந்த சமயம் பார்த்து நடேசன் அண்ணன் அங்கு வந்தார்.
அய்யனார் துணை:
வீட்டை வீட்டை சுற்றி யாராவது இருக்கிறார்களா என்று நடேசன் அண்ணன் பார்த்தார். அதற்குள் நிலா- சோழன் இருவரும் ஒளிந்து கொண்டார்கள். நடேசன் அண்ணன் கிளம்பியுடன் நிலா-சோழன் அங்கிருந்து எப்படியோ வந்து விட்டார்கள். பின் ஹோட்டலுக்கு வந்த நிலா, உயில் கிடைத்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்பட்டு பேசி இருந்தார். பின் எல்லோரும் தூங்கி இருப்பதால் நிலா- சோழன் இருவரும் ஒரே ரூமில் தங்கிக் கொண்டார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா-சோழன் இருவரும் தாங்கள் எடுத்து வந்த உயில் பத்திரத்தை நடேசன் இடம் காண்பிக்கிறார்கள். பல்லவன், சேரன், பாண்டியன் எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். பின் அந்த வீடு தங்களுக்கு தான் சொந்தம் என்பது தெரிந்த உடனே எல்லோருமே கிளம்பி வீட்டிற்கு போகிறார்கள். அங்கு நடேசன் அண்ணன், தங்கை, போலீஸ் எல்லோரும் வந்துவிடுகிறார்கள். அப்போது நடேசன், தன் பெயரில் இருக்கும் உயில் பத்திரத்தை காண்பிக்கிறார். போலீசார் எதுவுமே பேசவில்லை. நடேசன் அண்ணன்- தங்கை இருவரும் ஏதேதோ சொல்லிப் பார்க்கிறார்கள். ஆனால், போலீஸ் கேட்கவில்லை.

சீரியல் ட்ராக்:
ஒரு வழியாக வீட்டிற்கு வைத்த சீலை பிரித்து விடுகிறார்கள். நடேசன் குடும்பம் சந்தோஷமாக வீட்டிற்குள் செல்கிறார்கள். இனிமேல் வீட்டில் எல்லா வேலையும் செய்யலாம் என்று நடேசன் குடும்பத்தில் பேசிக்கொண்டார்கள். எல்லோரும் ரொம்ப சந்தோசமாக பேசி கொண்டு இருக்கிறார்கள். இதை ஒளிந்து நின்று தன் அண்ணன் பார்ப்பதை நடேசன் பார்த்து விட்டு அவரை வேண்டும் என்று வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறார். நடேசன் அண்ணனை நடுவில் நிற்க வைத்து எல்லோரும் டான்ஸ் ஆடுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது






