விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், நிலா இருவரும் தயாராகி அந்த வயதான ஜோடியை அழைத்துக்கொண்டு கோயில் குளம் என்று கிளம்பினார்கள். அப்போது அந்த வயசான ஜோடி, தங்களுடைய காதல் கதையை பற்றி சொன்னார்கள். நீங்களும் இதே மாதிரி உங்கள் கதையை வயதான பின் சொல்லணும் என்றார். நிலாவும் அதற்கு சரி என்றார். இதைக்கேட்டு சோழன் ரொம்பவே சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் அந்த வயதான ஜோடி கோயிலுக்குள் சென்றவுடன் சோழன், உண்மையாலுமே நாம் கடைசிவரை சேர்ந்திருப்போமா? என்றார். நிலா, நான் சும்மாதான் சொன்னேன் என்றார்.

இன்னொரு பக்கம் சேரன், பாண்டியன் இருவரும் என்ன செய்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். சந்தாவின் முறைமாமன் வீட்டிற்கு வருகிறார் என்று தெரிந்தவுடன் சேரன், நீங்கள் இங்கிருக்க தேவையில்லை. சந்தாவை அழைத்துக் கொண்டு நீ முதலில் இருந்து கிளம்பு அனிஷ் என்றார். அனிஷ்-சந்தா கிளம்பி போனார்கள். வானதி, பல்லவனை அழைத்துக் கொண்டு பைக்கில் வந்தார். இன்னொரு பக்கம் சந்தாவின் வீட்டிற்கு முறை மாமனும் வந்து கொண்டிருந்தார்.
அய்யனார் துணை:
அனிஸ்- சந்தா இருவரும் தப்பித்து ஓடி வந்தார்கள். அப்போது அங்கு வந்த பல்லவன் வானதி, சந்தாவிடம் விசாரித்தார்கள். அந்த இடத்திற்கு சந்தாவின் முறைமாமனும் தன்னுடைய ஆட்களுடன் வந்து விட்டார். சந்தா ரொம்பவே பயந்து போனார். உடனே வானதி, சந்தாவை தன்னுடைய வண்டியில் அழைத்துக் கொண்டு சென்றார். அதற்குப்பின் சந்தாவின் முறை மாமன்கள் அனிஷ் வீட்டிற்கு போனார்கள். உடனே பாண்டியன், இங்கு இந்திக்காரர்கள் யாரும் இல்லை. வீடு வாடகைக்கு விடுவதாக சொன்னார்கள். சந்தா முறை மாமனால் எதுவும் பேச முடியவில்லை.

சீரியல் ட்ராக்:
அங்கிருந்து கிளம்பி விட்டார். பின் வானதி அம்மா, சந்தாவை பார்த்து யாரு இந்த பெண்? எதற்காக இங்கே வந்திருக்கிறாய்? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார். வானதி ஏதேதோ சொல்லி சமாளித்து விட்டார். வானதியின் பெற்றோர்கள், சந்தா இங்கேயே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார்கள். பின் இதை பற்றி வானதி, பாண்டியன் இடம் சொன்னார். சேரன் ரொம்ப சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் கல்லூரியில் பல்லவன், தன்னுடைய அண்ணனுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று எல்லா போட்டிகளிலும் கலந்து கொண்டு கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார்.
https://www.youtube.com/watch?v=xUcTZOoStWQ
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பீச்சில் சோழன்- நிலா இருவரும் சந்தோஷமாக விளையாடுகிறார்கள். அப்போது நிலா, நீங்கள் பெரிய ஆளாக வரவேண்டும். நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றெல்லாம் சொல்கிறார். சோழன், நீங்கள் என்னை விட்டுப் போகப் போறீர்களா? எதற்காக இப்படி கேட்கிறீர்கள்? என்கிறார். நிலா, நீங்கள் எனக்காக எல்லாம் செய்திருக்கிறீர்கள். அதற்காக தான் கேட்கிறேன் என்கிறார். சோழன், நீங்கள் என்னுடன் இருந்தாலே போதும். நான் சொல்லும் ஆசையை செய்வீர்களா? என்று கேட்கிறார்.






