விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பல்லவனின் அம்மாவை நேரில் பார்த்து சோழன்-நிலா இருவரும் பேசி இருந்தார்கள். பின் பல்லவனின் அம்மாவை இருவரும் வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். சேரன், பாண்டியன் எல்லோரும் சந்தோசப்பட்டார்கள். ஆனால் நடேசன், பல்லவன் அம்மாவை பயங்கரமாக திட்டி வெளியே போக சொன்னார். இருந்தாலும் நடேசன் பேச்சை யாரும் கேட்கவில்லை. பல்லவன் அம்மாவை வீட்டிற்குள் அழைத்து வந்தார்கள். நடேசன், எவ்வளவு பிரச்சனை சந்திக்க போகிறீர்கள் என்று புரியவில்லை. நிறைய அனுபவிப்பீர்கள் என்றார்.

சேரன் குடும்பத்தில் எல்லோருமே பல்லவன் அம்மாவுடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள். இதை பார்த்த நடசேனுக்கு பயங்கர கடுப்பானது. மீண்டும் பல்லவன் அம்மாவை திட்டி வெளியே போக சொன்னார். நிலா, நடேசனை திட்டுகிறார். மறுநாள் காலையில் பல்லவன் அம்மா, வீட்டு வேலைகளை எல்லாமே செய்து கொண்டிருந்தார். சேரன் தடுத்துமே பல்லவன் அம்மா கேட்கவில்லை. இதை பார்த்து எல்லோருக்கும் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், நடேசன் கடுப்பானார்.
அய்யனார் துணை:
பல்லவன் அம்மா, டீ கொடுத்தும் வாங்கிக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியே போ என்று நடேசன் திட்டி இருந்தார். உடனே நிலா, தடுத்து நிறுத்தி பல்லவன் அம்மாவை அழைத்து சென்றார். சோழன், சேரன், பல்லவன் எல்லோருமே நடேசன் மீது கோபப்பட்டார்கள். இருந்தாலும் பல்லவன் அம்மா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின் எல்லோருமே கிளம்பி வேலைக்கு சென்றார்கள். நடேசன் இதுதான் சந்தர்ப்பம் என்று பல்லவன் அம்மாவை திட்டி வெளியே போக சொன்னார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நடேசன், என்ன திட்டத்தில் வந்திருக்கிறாய்? ஒழுங்கு மரியாதையாக வீட்டை விட்டு வெளியே போ என்றெல்லாம் சொல்கிறார். அதற்கு பல்லவன் அம்மா, நீ எத்தனை நாட்களுக்கு இப்படி இருக்கப் போகிறாய் என்று நானும் பார்க்கிறேன். நான் எங்கும் போக மாட்டேன் என்று சொல்லிக்கொண்டு உள்ளே சென்று விடுகிறார். அதற்குப்பின் பல்லவன் அம்மாவின் கணவர் போன் செய்து நீ நிம்மதியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறாய். கடன் கொடுத்தவர்கள் வீட்டில் பிரச்சனை செய்கிறார்கள். பணத்திற்கு ஏற்பாடு செய் என்கிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்கு பல்லவனின் அம்மா, நான் எப்படியாவது பணத்தை ஏற்பாடு செய்து விட்டு வந்து விடுகிறேன். அமைதியாக இரு என்று சொல்லிவிட்டு வீடு முழுவதும் பணம் இருக்கிறதா? என்று சோதனை செய்கிறார். இன்னொரு பக்கம் சேரன், பாண்டியன் புதுக்கடைக்காக தான் வேலை செய்யும் இடத்தில் பணம் கேட்கிறார்கள். அவர்களுமே தருவதாக ஒத்துக் கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் சோழனும் தன்னுடைய ஓனரிடம் பாண்டியனின் கடைக்காக பணம் கேட்கிறார். அதற்குப்பின் வீட்டிற்கு சீக்கிரமாகவே வந்த பல்லவன் தன் அம்மாவிடம் எமோஷனலாக பேசிக் கொண்டிருக்கிறார். பல்லவனின் அம்மாவும் நல்லவர் போலவே வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






