அடேங்கப்பா, அந்த நடிகை தான் இவங்களா – பல ஆண்டு கழித்து ரீ – என்ட்ரி கொடுத்துள்ள அழகி சீரியல் நடிகை

0
2923
- Advertisement -

கொரோனோ தொடங்கிய காலத்திலிருந்தே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சின்னத்திரை சீரியல் பக்கம் சென்று விட்டார்கள். இதனால் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தொலைக்காட்சி தொடர்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், தொலைக்காட்சி தொடர்கள் மட்டுமில்லாமல் அதில் நடிக்கும் நடிகர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள். வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரையில் வரும் நடிகர்களுக்கும் மக்கள் மத்தியில் ஆதரவு கிடைத்து விடுகிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சோனியா. சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற தொடர் அழகி. இந்த சீரியலில் அமைதியான குடும்ப தலைவியாக திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் சோனியா. இதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். இதனிடையே இவருக்கு திருமணம் ஆனது. பின் சீரியலில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு மீடியாவில் இருந்து விலகி இருந்தார்.

- Advertisement -

அருவி சீரியல் வில்லி:

தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அருவி என்ற சீரியலில் மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இதுகுறித்து சமீபத்தில் அவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் அவர் கூறியிருப்பது, திருமணத்திற்குப் பிறகு சீரியலில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அந்த சமயம் பார்த்து தான் எனக்கு அருவி சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. என்னுடைய முதல் சீரியல் சன் டிவியில் தான் ஆரம்பித்தது.

Karthick Vasu-Jovita Livingston starrer 'Aruvi' to narrate an interesting  story - Times of India

சோனியா கொடுத்த பேட்டி:

ஆறு வருடங்கள் கழித்து மறுபடியும் சன் டிவியில் தான் எனக்கு அமைந்தது. இது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. இந்த தொடரில் நான் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ஆரம்பத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரும் நான் புதிதாக நடிக்க வந்திருக்கிறேன் என்று தான் நினைத்தார்கள். போகப்போகத்தான் நான் சீரியலில் நடித்தது அவர்களுக்கு தெரியவந்தது. அதோடு முன்னாடி சீரியல்களில் நான் கொஞ்சம் சப்பியாக இருந்தேன். இப்போது வெயிட் லாஸ் பண்ணி உடம்பை குறைத்து இருக்கிறேன். அதனால் தான் பல பேருக்கு என்னை தெரியவில்லை.

-விளம்பரம்-

சோனியா நடத்தும் பிசினஸ்:

மேலும், நான் சீரியலில் நடிப்பதற்கு என்னுடைய ஃபேமிலி எப்பவுமே எனக்கு சப்போர்ட்டாக இருக்கிறது. மறுபடியும் கம்பேக் கொடுக்கணும் என்று சொன்னபின் கூட எந்த தடையும் சொல்லாமல் சரி உன் விருப்பப்படி செய் என்று சொல்லிவிட்டார்கள். சில வருடம் கழித்து கேமரா முன்னாடி நிற்கும் போது ஒரு புது அனுபவமாக இருந்தது. சீரியலில் இருக்கும் மொத்த டீமும் ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருக்கிறார்கள். இது தவிர நாங்கள் ‘சார்விக்’ஸ் இட்லி / தோசை மாவு’ என்கிற ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறோம். பிசினஸ், கேரியர் என இரண்டையுமே நான் மேனேஜ் பண்ணிட்டு வருகிறேன். அதேபோல் சோபா அம்மா எனக்கு ரொம்ப க்ளோஸ் பிரண்டு.

தளபதி விஜய் அம்மா ரொம்ப குளோஸ்:

அவங்க வேற யாரும் இல்லைங்க, தளபதிவிஜய் சாருடைய அம்மா தான். அவங்க என் கணவருடைய ஃபேமிலி பிரெண்ட். நான் கல்யாணம் ஆகி போன பிறகு அம்மாவும் நானும் குளோஸ் ஆகிவிட்டோம். அவங்க என்னை விட வயதில் மூத்தவளாக இருந்தாலும் நாங்க ரெண்டு பேரும் க்ளோஸ் பிரண்ட்டா தான் இருக்கிறோம். என்னோட பர்சனல் விஷயங்களையும் அவங்களுடைய பர்சனல் விஷயங்களையும் இரண்டு பேருமே பகிர்ந்து இருக்கிறோம். இதுவரை நான் விஜய் சாரை பற்றி எதுவுமே அம்மாகிட்ட கேட்டதும் இல்லை பேசியதும் இல்லை. எங்களைப்பற்றி கதை பேசவே எங்களுக்கு டைம் இல்லை. அதோடு அருவி சீரியல் டெலிகாஸ்ட் ஆனதும் அவர்கள் பார்த்துவிட்டு என்னை பாராட்டினார்கள்
என்று கூறியிருக்கிறார்

Advertisement