திடீரென்று நிறுத்தப்பட்ட அழகு சீரியல். வேறு தொலைக்காட்சிக்கு மாறிய நடிகர்.

0
2278
azhagu
- Advertisement -

கொரோனா பிரச்சனை காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் எல்லாம் ரத்தாகி இருந்தது. இருப்பினும் இடையில் சினிமாவின் போஸ்ட ப்ரொடக்சன் பணிகள் மட்டும் அனுமதிப்பட்டிருந்த நிலையில் சின்னத்திரை தொடர்களை பல கட்டுப்பாடுகளுடன் 60 பேர் மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் சின்னத்திரை ஷூட்டிங் அனைத்தும் துவங்கப்பட்டது.

-விளம்பரம்-

சினிமா ஷூட்டிங் இல்லாததால் தற்போது ரிலீஸ் ஆக இருந்த படங்கள் அனைத்தும் OTTயில் வருகிறது. இப்படி ஒரு நிலையில் ன் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அழகு சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இதனை அழகு சீரியலில் நடித்தது வந்த நடிகை சுருதி கூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு தெரிவித்திருந்தார். இப்படி ஒரு நிலையில் ‘அழகு’ சீரியலை தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘கல்யாணப் பரிசு’, ‘தமிழ்ச்செல்வி’, ‘சாக்லேட்’ உள்ளிட்ட சீரியல்கள் நிறுத்தப்பட்டது.

- Advertisement -

கொரோனா பிரச்சனை காரணமாக பல நடிகர்கள் கர்நாடக, ஆந்திரா என்று சொந்த மாநிலத்திற்கு சென்று விட்டனர். அதனால் ஷூட்டிங் மீண்டும் துவங்கப்பட்டவுடன் யாராலும் வர முடியவில்லை. என்னதான் 60 பெயரை மட்டும் வைத்துக்கொண்டு பாதுகாப்பாக ஷூட்டிங்கை நடத்தினாலும் அனைவருக்கும் கொரோனா பரவி விடுமோ என்ற பயமும் இருக்கிறது. என்று அப்போது கூறி இருந்தார் அழகு அழகு சீரியல் நடிகை பூர்ணா.

https://www.instagram.com/p/CE6onXyl4Sf/

இப்படி ஒரு நிலையில் அழகு சீரியலில் நடித்து வந்த அவினாஷ் தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் துவங்க இருக்கும் அம்மன் என்ற சீரியலில் நடிக்க இருக்கிறாராம். இதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். இந்த புதிய தொடரில் நந்திதா ஜெனிபர், பவித்ரா கௌடா போன்றவர்கள் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement