குஷ்பூனு சொல்லி ஏமாத்திட்டாங்க.. அழகு சீரியலில் விலகிய காரணத்தை சொன்ன சஹனா..

0
72059
alagu-sahana
- Advertisement -

சன் தொலைக்காட்சிகளில் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி ஒளிபரப்பானது “அழகு” சீரியல். இது ஒரு குடும்ப தொடராகும். இத்தொடரை இயக்குனர் ரவி வி. சி மற்றும் ரத்தினம் அவர்கள் இயக்கினார்கள். இந்த சீரியலில் ரேவதி கதாநாயகியாகவும், இவருடன் தலைவாசல் விஜய், ஸ்ருதி ராஜ், ஐஸ்வர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் அழகு சீரியலில் இருந்து திடீரென சஹானா வெளியேறி உள்ளார்.ஏன் ? சஹானா கதையில் இருந்து விலகினார் என்று பார்க்கலாமா … இந்த கதையில் சஹானா ரேவதிக்கு ஒரே மகள் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சஹானா இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நான் ரொம்ப பெருமை படுகிறேன் என்று அடிக்கடி சொல்வார்.ஆனால், இவர் தற்போது திடீரென வெளியே சென்றுவிட்டார் .

-விளம்பரம்-
Image result for alagu serial sahana

இது குறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியது. நான் முதலில் ‘ப்ரைம் டைம்ல ஒளிபரப்பான போது, இயக்குனர்கள் என்னிடம் நடிகை ரேவதிக்கு லீடு கொடுக்கும் கதையில் நடிகை உள்ளீர்கள் என்று சொல்லிதான் கூப்பிட்டாங்க. மேலும், இந்த தொடரலில் நாலு அண்ணன், தம்பிகளுக்கு ஒரே தங்கச்சி.சொல்லப்போனால் ‘ சின்ன தம்பி’ ,குஷ்பு மாதிரி நீங்க இந்த கதையில் நடிக்க போகிறீர்கள் என்று என்கிட்ட சொன்னாங்க. அது மட்டும் இல்லைங்க இந்த சீரியலில் உங்கள் கேரக்டருக்கு தான் ரொம்ப முக்கியத்துவம் இருக்குன்னு சொன்னார்கள். அதனாலதான் யாருக்கு? இப்படி கிடைக்கும் ஒரு ஜாக்கபாட்னு நினைச்சு சந்தோஷமா நடிக்க ஒத்துக்கிட்டேன்.முதல் எபிசோடில் இருந்தே நான் நடிச்சுட்டு வர்றேன். சூட்டிங் ஸ்பாட்டில் நான்தான் சின்ன பொண்ணு.

இதையும் பாருங்க : தமிழின் மாஸ் ஹீரோ படத்தில் இணைந்த கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..அதிகாரபூர்வ அறிவிப்பு..

- Advertisement -

ஆனா, சீனியர் ஆர்டிஸ்ட் எல்லோரும் என்னை சின்ன பொண்ணு என ஒதுக்கி வைக்காமல் எனக்கு நிறைய அட்வைஸ் தந்து என்கூட நல்லா பேசி பழகுவாங்க. இதுவரை 200 எபிசோடுகள் வரை நல்லா நடிச்சுட்டு இருந்தேன். பின்னர் என்ன காரணமோ? என்ன பிரச்சனையோ? தெரியல என் கேரக்டர் எனக்கே ரொம்ப போரடிக்கிற மாதிரி இருக்கு. மேலும், எனக்கு தெரிந்தவர்களும் ஏன் டல்லா நடிச்சுட்டு இருக்கீங்க, எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லாத கதாபாத்திரமா? போயிட்டு இருக்கு என்று அடிக்கடி கூறுவார்கள். இதை தொடர்ந்து, இந்த அழகு சீரியல் 500 எபிசோடுகள் முடிந்த நிலையில் கதையில் உள்ள அனைத்து கேரக்டர்களும் கொஞ்சம் போரடிக்கிற மாதிரியே இருக்கு.

Image result for alagu serial sahana

எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல், அதே மாதிரி இருக்கு என்று எனக்கு தோன்றியது. எல்லா சீரியலும் கொஞ்ச நாள் போனால் அந்த கேரக்டரை மாத்திடுவாங்க.இதனால், மக்களிடையேயும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைக்கும். நடிக்கிர எங்களுக்கும் பெருமையாக இருக்கும். அப்படி இல்லாமல் இருக்கும்போது சீரியலில் நடிப்பதில் என்னங்க அர்த்தம்? இல்ல எங்களுக்கு என்ன பயன்? இதனால்தான் அழகு சீரியல் இருந்து வெளியேறினேன் என்றும் கூறினார். இது மட்டும் இல்லைங்க நான் என்னுடைய கதாபாத்திரத்தை கொஞ்சம் டெவலப் பண்ணுங்கன்னு கூட சொல்லி பார்த்தேன். ஆனால், யாரும் அதை காதில் வாங்கவே இல்லை. வேற வழி இல்லாம தான் நான் விலகிவிட்டேன் என்கிறார் சஹானா.

-விளம்பரம்-
Advertisement