கோபியை தொடர்ந்து பாக்கிலட்சுமி தொடரில் இருந்து விலகிய மற்றொரு நபர்- இனி அவருக்கு பதில் இவர்

0
931
Baakiyalakshmi
- Advertisement -

பாக்கியலட்சுமி தொடரில் இருந்து சதீஷ் விலகிய நிலையில் தற்போது இன்னொரு நடிகரும் விலகி இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனால் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடரில் கோபி கேரக்டரில் நடித்து ரசிர்களிடைய அதிகம் ரீச் ஆனவர் சதீஷ். குடும்ப இல்லத்தரசிகள் பலரும் கோபி மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு இந்த தொடரின் மூலம் சதீஸ் மக்களின் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் கோபி மீண்டும் பாக்கியலட்சுமி வீட்டிற்கு சென்று விடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த ராதிகா என்னை விட்டு எப்படி நீ இந்த வீட்டிற்கு வரலாம் என்று அவரும் பாக்கிய வீட்டிற்கு வந்துவிட்டார்.

- Advertisement -

சீரியலில் இருந்து விலகிய சதிஷ் :

இப்படி சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் தருணத்தில் இந்த தொடரில் இருந்து விலகுவதாக சதிஷ் அறிவித்திருப்பது வெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து வீடியோ வெளியிட்டு இருக்கும் அவர் ‘நான் சொல்லப்போகும் இந்த விஷயம் நிறைய பேருக்கு கோபம் எரிச்சல் வருத்தத்தை தரலாம் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும், இதை செய்துதான் ஆக வேண்டும். இன்னும் 10 15 எபிசோடுகளில் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து நான் விலகுகிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை.

சுமாராக நடித்திருக்கிறேன் :

சதீஷ் ஆகிய நான் கோபியாக நடித்துக் கொண்டிருக்கும் அந்த கதாபாத்திரத்தில் இருந்து விலகுகிறேன். அதற்கு காரணங்கள் பல இருக்கிறது. ஆனால் சில தனிப்பட்ட காரணங்களும் இருக்கிறது. இந்த கோபி கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு விஜய் டிவிக்கு மிக்க நன்றி. நானும் யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் என்னை பாராட்டும் அளவிற்கு என்னால் முடிந்த அளவு சுமாராக நடித்திருக்கிறேன். என் மீது அன்பு காட்டிய அனைவருக்கும் நன்றி’ என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

விலகிய மற்றொரு நடிகர் :

இந்த நிலையில் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து சதீஷை தொடர்ந்து தற்போது இன்னொரு நடிகரும் விலகி இருக்கிறார். கோபி கதாபாத்திரத்தின் நண்பர் ரோலில் நடித்து வந்த நடிகர் தான் விலகி இருக்கிறார். கோபி தன் பர்சனல் விஷயங்களை கூறி அட்வைஸ் கேட்டும் நபராக அந்த கதாபாத்திரம் இருக்கும். நடிகர் அரவிந்த் தற்போது அந்த ரோலில் நடிக்க தொடங்கி இருக்கிறார். வழக்கம் போல ‘அவருக்கு பதில் இவர்’ என குறிப்பிட்டு நேற்றைய எபிசோடில் காட்சி வந்திருக்கிறது.

Advertisement