விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் செழியன் கோபப்பட்டு கவுன்சிலரை தாறுமாறாக போட்டு அடித்தார். பாக்கியாவிற்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. இருவரையும் விலக்கி வைத்தார்.
அதற்கு பின் வீட்டிற்கு வந்த செழியன், ஹோட்டலில் நடந்ததை பற்றி சொல்ல, அதை கேட்டு எழிலும் கோபப்பட்டார். உடனே ஈஸ்வரி, உன்னால் தான் வீட்டில் நிம்மதி இல்லாமல் போய்விட்டது என்று பாக்கியாவை வறுத்து எடுத்துக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் பாக்கியா ஹோட்டல் திறக்கப் போனார். அப்போது அந்த கடையின் ஓனர், கவுன்சிலர் பிரச்சனை செய்வார். அதனால் கடை திறக்க வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

எழில், தன்னுடைய பட விஷயம் தொடர்பாக வெளிநாட்டுக்கு சென்றார். வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷமாக எழில், அமிர்தாவையும் வாழ்த்தி அனுப்பி இருந்தார்கள். அதற்குப்பின் போலீஸ் பாக்கியா வீட்டிற்கு வந்தார்கள். அப்போது அவர்கள், கவுன்சிலரை அடித்த விவகாரத்தில் செழியனை கைது செய்வதாக சொன்னார்கள். பாக்கியா, நடந்ததை சொல்ல வந்துமே போலீஸ் கேட்கவில்லை. செழியினை வலுக்கட்டாயமாக போலீஸ் இழுத்து சென்றார்கள். இதனால் மொத்த குடும்பமே கதி கலங்கி நிற்கிறது. வழக்கம் போல ஈஸ்வரி, எல்லாத்துக்கும் காரணம் நீதான் பாக்கியா என்று ரொம்ப கோபமாக திட்டிக் கொண்டிருந்தார்.
பாக்கியலட்சுமி:
ஜெனியுமே பாக்கியாவை தான் குறை சொன்னார். பின் கோபி போலீஸ் ஸ்டேஷனுக்கு போனார்.
அதற்குப் பின் வீட்டிற்கு வந்த ஜெனியின் அப்பா, உண்மை தெரியாமல் பாக்கியாவை தான் திட்டிக் கொண்டிருந்தார். ஆனால், பாக்கியா எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார். அதற்குப்பின் வீட்டுக்கு வந்த கோபி, கவுன்சிலர் நிறைய அரசியல்வாதிகளை கைக்குள் வைத்து இருந்தார். செழியனை வெளியே எடுப்பது கொஞ்சம் கஷ்டம் தான் என்று சொன்னார். அதற்குப்பின் சுதாகரும், இனியாவும் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது சுதாகர், என்னால் முடிந்த உதவியை செய்கிறேன் என்று நக்கல் ஆக பாக்கியாவை பார்த்து சொன்னார். அதற்குப்பின் செழியன் கைது செய்த விவகாரம் தொடர்பாக சுதாகர் விசாரித்தார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் சுதாகர், தனக்கு தெரிந்தவர்களின் மூலம் விசாரித்து செழியனை வெளியே எடுப்பது கொஞ்சம் கஷ்டம்தான். நான் முடிந்த வரை முயற்சிக்கிறேன் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி விட்டார். இதனால் ஈஸ்வரி பாக்கியாவிடம் ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். பின் பாக்கியா, போலீஸ் ஸ்டேஷனில் கவுன்சிலர் மீது கம்ப்ளைன்ட் கொடுத்தார். அப்போது போலீஸ், நீங்க முன்னாடியே புகார் கொடுக்க வேண்டியது தானே, இப்போது எதுக்கு கொடுக்கிறீர்கள்? என்று அந்த கம்ப்ளைண்ட்டை பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை.

சீரியல் ட்ராக்:
பின் வீட்டில் இதைப் பற்றி பாக்கியா சொன்னவுடன் ஈஸ்வரி, ஜெனியின் அப்பா எல்லோரும் திட்டினார்கள். உடனே கோபத்தில் ஜெனியின் அப்பா, ஜெனியையும் அவருடைய குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். பாக்கியா எப்படியாவது செழியனை வெளியே கொண்டு வர வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தார். தனக்கு தெரிந்தவர்கள் மூலமெல்லாம் உதவி கேட்டார். கடைசியில் பாக்கியா கவுன்சிலர் வீட்டுக்கு சென்றார். அங்கு கவுன்சிலர் நக்கலாக பாக்யாவிடம் பேசி இருந்தார். கவுன்சிலர், நீ உன் பையனை வெளியில் அழைத்து வருவது ரொம்ப கஷ்டம் என்று சொன்னார். இதனால் பாக்கியா ரொம்பவே பதறி போனார்.
https://www.youtube.com/watch?v=l7NhFLKYTwA
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் பாக்கியா கவுன்சிலரிடம் தன் மகனை வெளியே எடுக்க கேட்கிறார். ஆனால், கவுன்சிலர், பாக்கியவையும் அவருடைய மகனையும் பழிவாங்க முடியாது என்று மறுக்கிறார். பின் பாக்கியா எப்படியாவது செழியினை வெளியே கொண்டு வர வேண்டும் என்று போராடுகிறார். அப்போது தனக்கு தெரிந்த அமைச்சரை சந்தித்து உண்மையை சொல்ல வேண்டும் என்று பாக்கியா கிளம்புகிறார்.






