ஷகிலா மகள் மிளா சென்ற கார் விபத்து – உடன் பயணித்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகைகள். என்ன ஆனது ?

0
447
Mila
- Advertisement -

ஷகிலாவின் மகள் மிளாவின் கார் விபத்துக்குள்ளாகி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. ஷகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள். அந்த அளவிற்கு இவருடைய படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டிய நடிகை. இவர் தமிழ் சினிமா உலகில் துணை நடிகையாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார். இவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் மலையாள கரையோரம் ஒதுங்கி கவர்ச்சி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதனாலேயே இவருக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள்.

-விளம்பரம்-

கவர்ச்சி நடிகையாக இருந்த இவரை தற்போது அம்மா என்று சொல்லும் அளவிற்கு மாற்றியது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். அதே போல இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றாலும் இவர் மிளா என்ற திருநங்கையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மிளா ஒரு ஆடை வடிவமைப்பாளராக வேலை செய்து வருகிறார். அதே போல இவர் சில சீரியல்களில் கூட நடித்து இருக்கிறாராம். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தியாகம், மருதாணி சீரியலில் நடித்துள்ளார். மேலும், அவருடைய உண்மையான பெயர் ஹிஷாம். இவர் துபாயை சேர்ந்தவர். தான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது தன்னுள் பெண்ணை இருப்பதை உணர்ந்து பெண்ணாக மாறினார்.

- Advertisement -

மிளாவை பற்றிய தகவல்:

அதன் பின் தான் சகிலா மிளாவை தத்து எடுத்தார். மேலும், சகிலா பல யூடியூப் சேனலுக்கு மிளா குறித்து பேட்டி கொடுத்திருந்தார். இவர் தன் அம்மாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அடிக்கடி சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவார். அது மட்டுமில்லாமல் பல திருநங்கைகளுக்கு முன்னுதாரணமாக மிளா திகழ்ந்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் மிளா கலந்து கொள்ள இருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் அவருக்கு பதில் நமிதா மாரிமுத்து நிலையில் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மிளா பேபி கேர்ள் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.

மிளாவிற்கு ஏற்பட்ட கார் விபத்து:

இதில் அவர் போட்டோ ஷூட் நடத்தி வீடியோக்களை வெளியிடுவார். பல பிரபலங்களை பேட்டி எடுத்தும் வருகிறார். சமீபத்தில் கூட செயற்கையான முறையில் கர்ப்பிணி போட்டோஷூட் நடத்தி இருந்தார். இதை பார்த்த பலரும் பாசிட்டிவான கமெண்டுகளை பதிவிட்டு இருந்தார்கள். இந்நிலையில் சகிலாவின் மகள் மிளாவின் கால் விபத்துக்குள்ளாகி உள்ளது. அந்த காரில் மிளா மட்டும் இல்லாமல் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை திவ்யா கணேஷ், கம்பம் மீனா ஆகியோர் இருந்துள்ளார்கள். மிளா, திவ்யா, கம்பம் மீனா ஆகிய இவர்கள் மூவருமே நல்ல நண்பர்கள். இவர்கள் மூவருமே அடிக்கடி மீட் பண்ணி வெளியே செல்வது, ஷூட் பண்ணுவது என்று புகைப்படங்களை எல்லாம் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவார்கள்.

-விளம்பரம்-

விபத்து குறித்து மிளா சொன்னது:

இந்நிலையில் இவர்கள் மூவரும் சேர்ந்து ஒரு சூட்டிங்கிற்காக குமிலிக்கு சென்றிருக்கிறார்கள். அப்போது போதும் இவர்களுக்கு கார் விபத்து ஏற்பட்டிருக்கிறது. ஆனால், மூவருக்குமே பெரிய அளவில் எந்த ஒரு காயங்களும் ஏற்படவில்லை. மேலும், இதுகுறித்து மிளாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியிருப்பது, குமிலியில் நடக்கும் ஷூட்டிங்கிற்கு நாங்கள் மூவரும் சென்று இருந்தோம். அப்போது திருச்சி பக்கத்தில் எங்களுக்கு விபத்து ஏற்பட்டது. நல்லவேளை யாருக்கும் எந்த ஒரு அடியும் இல்லை. எங்கள் வண்டிக்கு பின்னாடி கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது.

வைரலாகும் கார் விபத்து புகைப்படம்:

அது தடுமாறி பேலன்ஸ் செய்ய முடியாமல் எங்களுக்கு பின்னாடி வந்த காரின் மீது மோதியது. அந்த கார் எங்கள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. ஒருவேளை எங்களுக்கு முன்னாடி வேற ஏதாவது கார் இருந்து இருந்ததால் எங்களுக்கு நிறைய அடிபட்டு இருக்கும். அதேபோல் மற்றவர்களுக்கும் விபத்தில் எந்த ஒரு அடியும் இல்லை. எனக்கு மட்டும் முதுகில் பிளட் கிளாட் சின்ன காயம் ஏற்பட்டிருக்கிறது என்று கூறி விபத்து நடந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர்கள் மூவரும் குமுளி போய் சூட்டையும் முடித்து அங்கே டைம் ஸ்பெண்ட் பண்ணி இருக்கிறார்கள். அப்போது எடுத்த புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் பதிவு செய்திருக்கிறார்கள்.

Advertisement