குடித்து விட்டு கோபி செய்த வேலை, மீண்டும் வீட்டை விட்டு வெளியேறும் எழில்- விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

0
240
- Advertisement -

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராமமூர்த்தி இறந்துவிட்டார் என்று சொன்னவுடன் மொத்த குடும்பமும் நம்பவும் முடியாமல், ஏற்று கொள்ள முடியாமல் பரிதவித்து இருந்தது. ஒவ்வொருவருமே தாத்தாவை நினைத்து புலம்பி அழுது இருந்தார்கள். கடந்த வாரம், இறுதி சடங்கு செய்ய கோபி தயாராகி இருந்தார். ஆனால் ஈஸ்வரி, நீ செய்யக்கூடாது என்று சொன்னவுடன் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. உடனே கோபி, என்னுடைய அப்பாவிற்கு நான் தான் இறுதி சடங்கு செய்வேன் என்று அழுது கெஞ்சி இருந்தார். இருந்தாலுமே, ஈஸ்வரி ஏற்றுக் கொள்ளவில்லை.

-விளம்பரம்-

பின் மகள் இடத்தில் இருந்து எல்லாமே பாக்கியா செய்வாள் என்று ஈஸ்வரி சொன்னவுடன் கோபி ஒத்து கொள்ளவில்லை. கடைசியில் பாக்கியா தன்னுடைய மாமனாருக்கு இறுதி சடங்குகளை எல்லாம் செய்தார். கோபி ஓரமாக நின்று எதுவும் செய்ய முடியவில்லை என்ற வருத்தத்தில் இருந்தார். அதன் பின் வேதனையில் ஈஸ்வரி, பாக்யாவின் மடியில் படுத்து ராமமூர்த்தியின் உடைய பழைய நினைவுகளை பகிர்ந்து இருந்தார். மறுநாள் ராமமூர்த்தியின் அஸ்தியை செழியன்,எழில் வாங்கி வந்து கங்கையில் கரைத்தார்கள். கோபி, ராதிகாவும் மயானத்திற்கு போயி அஸ்தியை வாங்கி கரைத்தார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

இன்னொரு பக்கம் வீட்டில் ஜெனியை தங்களுடன் அழைத்து செல்வதற்கு அவரின் அப்பா- அம்மா பேச, எல்லோருமே ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால், ஜெனி மட்டும் வரமாட்டேன் என்று அடம் பிடித்தார். எல்லா சடங்குகளையும் எழில், செழியன் முடித்து விட்டு வீட்டிற்கு வந்தார்கள். மேலும், ராமமூர்த்தியை நினைத்து ஈஸ்வரி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது எல்லோருமே வீட்டில் தங்களுடைய அடுத்த வேலைகளை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே பாக்கியா, ஈஸ்வரிக்கு நெத்தியில் பொட்டு வைத்து, நீங்கள் இப்படி இருந்தால் தான் மாமாவுக்கு பிடிக்கும் என்று சொல்கிறார்.

சீரியல் கதை:

மறுநாள் செழியன்- எழில் வாக்கிங் போகும்போது கோபியும் வாக்கிங் சென்றிருந்தார். அவர்கள் பெரிதாக அவரிடம் பேசவில்லை . அப்போது ஒருவர் கோபியிடம், ராமமூர்த்திக்கு பத்தி பேசி வம்பு இழக்க, ஆத்திரத்தில் கோபி கத்த, உடனே செழியன் சமாதானம் செய்து அனுப்பி விடுகிறார். நேற்று எபிசோடில், ராமமூர்த்தியின் துணிகளை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர் கடிதம் எழுதி வைத்த விஷயம் தெரிகிறது. பின் எல்லோரையுமே ஹாலில் வரவைத்த ஈஸ்வரி, செழியனிடம் உயிலை கொடுத்து படிக்க சொல்கிறார்.

-விளம்பரம்-

நேற்று எபிசோட்:

அதைக் கேட்டு அனைவருமே கண் கலங்குகிறார்கள். பின் ஒவ்வொருவருக்கும் எழுதிய கடிதத்தை எடுத்துப் படிக்கிறார்கள். ஈஸ்வரி, ராமமூர்த்தியின் கடிதத்தை படித்து மனம் உடைந்து அழுகிறார். பின் பாக்கியாவுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் ராமமூர்த்தி பேசியிருக்கிறார். அதைப் படித்து பாக்கி தேம்பி அழுகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், ராமமூர்த்தி எழுதிய கடிதத்தை செழியன் படிக்கிறார். அதற்குப் பின் அமிர்தா- எழில் பற்றி ராமமூர்த்தி எழுதியிருக்கும் கடிதத்தை படிக்கிறார்கள். கடைசியாக இனியா தன் தாத்தா எழுதிய கடிதத்தை படிக்கிறார்.

இன்றைய எபிசோட்:

கடிதத்தை படித்து முடித்து எல்லோரும் வருத்தப்பட்டு அழ, இதையெல்லாம் வாசலில் நின்று ராமமூர்த்தி பார்க்கிறார். இன்னொரு பக்கம் கோபி பாரில் நிலைமை தெரியாத அளவிற்கு குடித்து விட்டு உளறுகிறார். அவருடைய நண்பரும் எவ்வளவு சமாளித்தும் முடியவில்லை. பின் ராதிகா வந்து கோபியை அழைத்துச் செல்கிறார். கோபி திமிராகவே ராதிகாவிடம் பேசுகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் அமிர்தா- எழில் இருவரும் கிளம்புகிறோம் என்று சொன்னவுடன் எல்லோருமே வருத்தப்படுகிறார்கள். அதற்கு எழில், தாத்தாவின் ஆசையை நிறைவேற்றி விட்டு நான் வருகிறேன் என்று சமாதானம் செய்துவிட்டு செல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement