வயசான லவ் பண்ண கூடாது இல்ல, இப்போ தண்டனையை அனுபிக்குவிக்கிறேன் – பாக்கியலட்சுமி கோபி வெளியிட்ட வீடியோ

0
605
Baakiyalakshmi
- Advertisement -

பாக்யலக்ஷ்மி சீரியல் நடிகர் கோபி வெளியிட்டிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா, வேலு லட்சுமணன், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த சீரியலை இயக்குநர் டேவிட் என்பவர் இயக்கி வருகிறார். மேலும், இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாக பாக்கியலட்சுமி திகழ்கின்றது. இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக தொடரில் எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் வீட்டில் உள்ள பெண்களுக்கு ஒரு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது. பெண்கள் குடும்பத்தை பார்த்துக் கொண்டாலும் தனக்கு என்று ஒரு வேலை இருக்க வேண்டும்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை உணர்த்துகிறது. சீரியல் உச்ச கட்ட பரபரப்பில் எட்டி வருகிறது. அதிலும் கடந்த 2 வாரமாக பாக்கியலட்சுமி சீரியலின் டிஆர்பி எகிறிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அதற்கு காரணம் சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த திருப்பங்கள் அரங்கேறி கொண்டு இருப்பது தந். அதாவது, கோபி வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது கோபி குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் தெரிந்து விட்டது.

சீரியலின் கதை:

இந்த நேரம் பார்த்து கோபி விபத்தில் சிக்கி கொள்கிறார். பின் கோபி ஹாஸ்பிட்டலில் இருக்கிறார். கோபி மருத்துவமனையில் இருப்பதை அறிந்து ராதிகா, பாக்கியா இருவரும் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அப்போது ராதிகா, கோபியின் மருத்துவ செலவை பார்த்து கொள்கிறார். கோபி காதலிக்கும் நபர் ராதிகா என்ற உண்மை பாக்கியாவிற்கு தெரிய வருகிறது. இதனால் பாக்கியா அதிர்ச்சியில் உறைந்து போகிறார். பின் வீட்டிற்கு வந்த கோபியிடம் கேள்வி கேட்கிறார் பாக்கியா.

-விளம்பரம்-

சீரியலில் அடுத்து நடப்பது:

கோபி-ராதிகா இருவரும் பேசியதை வீட்டில் எல்லோரும் முன்னிலையிலும் பாக்கியா நிற்க வைத்து கேள்வி கேட்கிறார். கோபி வீட்டில் புயல் அடித்துக் கொண்டிருக்கின்றது. மேலும், கோபி பற்றிய உண்மையை மொத்த குடும்பத்திற்கும் தெரிந்தவுடன் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இதற்கு பின் என்ன ஆகுமோ? கோபி-பாக்கியா பிரிந்துவிடுவார்களா? ராதிகா- கோபி திருமணம் நடக்குமா? என்ற பல கேள்விகளுடன் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். இந்த நிலையில் கோபியாக நடிக்கும் சதீஷ் தனது ரசிகர்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

சதீஸ் வெளியிட்ட வீடியோ:

அதில் அவர் கூறி இருப்பது, தொடர்ந்து கோபி கதாபாத்திரத்திற்கு ஆதரவு கொடுக்கும் ரசிகர்களுக்கு நன்றி. அடுத்த ஒரு வாரத்திற்கு செய்த குற்றத்திற்கு தண்டனை அனுபவிக்க தயாராக இருக்கேன். என்ன பண்ண முடியும்? காதலுக்காக நிறைய பொய் பித்தலாட்டங்களை சொல்லி இருக்கிறார் கோபி. அனுபவித்து தான் ஆகணும். வயதானால் காதல் பண்ண கூடாது என்று சட்டம் இருக்கா? என்ன பண்றது ஓகே நன்றி என்று கூறியிருக்கிறார். இப்படி சதீஸ் கூறி இருக்கும் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement