சீரியலில் கைகூடிய காதல் நிஜத்தில் கூடல - பிரபல வில்லன் நடிகருடன் காதல். திருமணத்திற்கு முன் பிரேக்கப்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாகயலக்ஷ்மி தொடர் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ். அதன் பின்னர் லட்சுமி வந்துச்சி, சுமங்கலி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி தொடர் மூலம் அறிமுகமானார்.இவருக்கும் பிரபல நடிகருமான ஆர் கே சுரேஷுக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் இவர்கள் திருமணம் நடைபெறாமல் போனது பற்றி தெரியுமா.
கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆர் கே சுரேஷ் மற்றும் திவ்யா இருவரும் பிரஸ் மீட் ஒன்றை வைத்து விரைவில் தாங்கள் திருமணம் செய்துகொள்வதாக கூறி இருந்தார்கள். இவரும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடனும் இவர்கள் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இவர்களது திருமணம் ந்டைபெறாமல் போனது.
இதையும் பாருங்க ": ஆங்கிலோ இந்தியன் பெண்ணை திருமணம் - தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்
இது குறித்து பேசிய திவ்யா அவர் நல்ல மனிதர். ஆனால் எங்களுக்குல் நிறைய விஷயங்கள் வேறுபடுகிறது. மேலும் கருத்து வேறுபாடுகளும் உள்ளது. இந்த கருத்துவேறுபாடுகள் பெரிதாகி திருமணம் முடிந்து பெரும் பிரச்சனை பெரிதாகி வேண்டாம் என எங்களுக்குள் நாங்களே பேசி முடிவு செய்தோம். இதனால் தான் திருமண நிச்சயம் ஆன பின்பும் திருமணம் வேண்டாம் என பிரிந்துவிட்டோம் என கூறினார்.
இப்படி ஒரு நிலையில் இந்நிலையில், நடிகர் ஆர்.கே. சுரேஷுக்கும், சினிமா பைனான்சியரான மது என்பவருக்கும் கடந்த ஆண்டு அக்டொபர் மாதம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். அந்த திருமண விழாவில் வெறும் 15 பேர் தான் கலந்து கொண்டார்கள். அக்டோபரில் திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.