ஆங்கிலோ இந்தியன் பெண்ணை திருமணம் – தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்

0
2232
ma-ka-pa
- Advertisement -

விஜய் டிவி மூலம் பல தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் மா.கா.பா ஆனந்த். மா.கா.பா ஆனந்த் அவர்கள் 1986 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் தன்னுடைய கல்லூரி படிப்பை சென்னையில் தான் முடித்தார். பின் ஒரு பி.பி.ஒ கம்பெனியில் வேலை செய்து வந்தார். அந்த கம்பெனியில் வேலை செய்தவர் தான் சுஸினா ஜார்ஜ். சுஸினா பாண்டிசேரியை சேர்ந்தவர். மேலும் அவர் ஒரு ஆங்கிலோ இந்தியன் ஆவார். பின் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. மா.கா.பா ஆனந்த் அவரை திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

தற்போது மா.கா.பா விற்கும், சுஸினாவிற்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். மா கா பா ஆனந்த் அவர்கள் ஆர்.ஜே, வி.ஜே, திரைப்பட நடிகர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் முதலில் சூரியன் பண்பலையில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார் அதற்கு பிறகு ரேடியோ மிர்ச்சி பண்பலையில் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினார்.

- Advertisement -

அதாவது இவர் ரேடியோ ஜாக்கியாக தான் தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். அதற்கு பிறகு ரேடியோ மிர்ச்சி ஆக ஆறு வருடங்கள் பணி புரிந்தார். மா.கா.பா ஆனந்த் அவர்கள் பத்து வருஷம் ஆர்.ஜேவாக இருந்து தான் விஜய் டிவியில் ஆங்கர் ஆனார்.அதற்குப் பிறகு தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர், அது இது எது, சினிமா காரம் காபி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.

This image has an empty alt attribute; its file name is 1-132.jpg

மேலும், இவர் 2014ம் ஆண்டு நடிகர் கிருஷ்ணாவுடன் இணைந்து வானவராயன் வல்லவராயன் என்ற திரைப்படத்தில் நடித்தார். ம க பா ஆனந்த், சுசானா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு Anielia Lekha என்ற மகளும் Lorenzo என்ற மகனும் இருக்கிறார்கள். சமீபத்தில் தான் ம க பா தனது 15வது வருட திருமண நாளை குடும்பநண்பர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார். இந்த நிலையில் மாகாபா ஆனந்த் தனது மனைவியுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement