விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் ஈஸ்வரி, பாக்யா முன்பு போல் இல்லை. இரண்டு ரெஸ்டாரன்ட் திறந்த திமிரில் இருக்கிறாள். என்னை மதிப்பதே இல்லை என்று திட்டிக் கொண்டிருந்தார். அதற்கு கோபி, பாக்கியா தெளிவாக இருக்கிறார். இந்த கல்யாணத்தில் அவளுக்கு விருப்பமில்லை என்றால் விடுங்கள். எதற்காக தேவையில்லாமல் கட்டாயப்படுத்துகிறீர்கள் என்று சொன்னார். பின் வீட்டுக்கு வந்த பாக்கியாவிடம் ரெஸ்டாரண்டில் நடந்ததை பற்றி ஈஸ்வரி கேட்டார். உடனே பாக்கியா, என் விருப்பம் இல்லாமல் நீங்கள் எப்படி சொல்லலாம். எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்று சொல்ல, இருவருமே மாறி மாறி வாக்குவாதம் செய்தார்கள்.

நேற்று எபிசோட்டில் கோபி, அம்மா சொன்னது தவறுதான். அம்மா பேசின வார்த்தைக்காக நான் உன்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உன்னுடைய விருப்பம் தெரியாமல் அவர் இப்படி பேசியிருக்கக் கூடாது. இனிமேல் இந்த வீட்டில் இந்த மாதிரி பேச்சு வராது என்று சொன்னார். இருந்தாலுமே ஈஸ்வரி கேட்காமல் பாக்யாவிடம் சண்டைக்கு போனார். பின் எப்படியோ கோபி சமாதானம் செய்து பாக்கியாவை அனுப்பி வைத்தார். அதற்குப்பின் ஈஸ்வரியிடம் கோபி, நீங்கள் இந்த திருமணத்தை பற்றி பேசாதீர்கள் என்று தன்னுடைய அம்மாவிற்கு அறிவுரை சொன்னார்.
பாக்கியலட்சுமி:
அதற்குப்பின் கோபி, பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்டார். உடனே பாக்கியா, நீங்கள் எப்போது இந்த வீட்டை விட்டு போகிறீர்கள் என்று கேட்டவுடன் ஈஸ்வரிக்கு பயங்கர கோபம் வந்து சண்டை போட்டார். அதற்கு கோபி, இரண்டு மாதத்திற்குள் நான் கிளம்பி விடுகிறேன் என்று சொன்னார். ஈஸ்வரி, நீ பேசுவது நியாயமா? என் இப்படியே சொல்லியிருந்தால் நானும் சென்று விடுவேன் என்றார். பாக்கியா, நீங்களும் தாராளமாக உன் மகனுடன் செல்லலாம் என்றவுடன் ஈஸ்வரிக்கு இன்னும் கோபம் அதிகமானது. அதற்குப்பின் கோபி, செழியனை தனியாக வரவைத்து அழைத்து பேசி இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இப்படி இருக்கும் நிலையில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி சாப்பிடாமல் கோபமாகவே இருக்கிறார். பாக்கியா, எவ்வளவு எடுத்துச் சொல்லியும் ஈஸ்வரி கேட்கவே இல்லை. பின் பாக்கியா ரெஸ்டாரன்ட் கிளம்பி வருகிறார். இன்னொரு பக்கம் இனியா, ஆகாசுடன் போன் பேசிக் கொண்டிருக்கிறார். பாக்கியா போன் செய்துமே அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் ஆகாஷ் உடன் தொடர்ந்து இனியா போன் பேசிக்கொண்டு இருக்கிறார். வீட்டிற்கு வந்த கோபி கோபி தன் அம்மாவை சமாதானம் செய்து சாப்பிட வைக்கிறார்.

சீரியல் ட்ராக்:
அந்த சமயம் பார்த்து பாக்கியா வருகிறார். பின் இனியாவிடம் போன் எடுக்காதது பற்றி பாக்கியா கேள்வி கேட்கிறார். ஆனால், இனியா ஏதேதோ சொல்கிறார். பாக்கியா கோபப்பட்டு திட்டுகிறார். அதற்குப்பின்
பாக்கியா ரெஸ்டாரன்ட் கணக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். உடனே கோபி அவருக்கு காபி போட்டு கொடுத்தார். ஆனால், பாக்கியா அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலை செய்து கொண்டிருக்கிறார். இதை பார்த்து கோபிக்கு ரொம்ப கஷ்டமாகிறது.
https://www.youtube.com/watch?v=0ImxN9oLEDE
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பாக்கியா வீட்டிற்கு செழியன், எழில் குடும்பத்தை கோபி பேசி வரவைக்கிறார். எல்லோருமே குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறார்கள். பாக்கியா தன்னுடைய பிள்ளைகளுக்காக மும்முரமாக சமைக்கிறார். அப்போது கோபி, இப்போ உனக்கு சந்தோஷமா, உன்னுடைய மகன்களுடன் இருப்பது தானே உனக்கு பிடிக்கும் என்று சொல்கிறார். உடனே கோபத்தில் பாக்கியா, நான் உங்களிடம் கேட்டேனா? என் மகன்கள் எங்கிருந்தாலும் எனக்கு சந்தோசம் தான். இங்கே இருந்தால் என்னென்ன பிரச்சனை வரும் என்று எனக்கு தான் தெரியும். உங்க அம்மா என்னன்னு சொல்ல போறாங்க பாருங்க என்று கோபப்படுகிறார். அதற்கு ஏற்ப ஈஸ்வரி, எழில்- அமிர்தாவை பார்த்து எப்ப குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள்? என்று பழையபடி ஆரம்பிக்கிறார். இதை பார்த்தவுடன் பாக்கியாவிற்கு கோபி மீது இன்னும் கோபம் அதிகமாகின்றது.






