Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
1aaabaakiuy654 1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.08.23பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தாத்தாவின் பிறந்தநாளுக்கு தயாரான பாக்கியா குடும்பம், குழப்பத்தில் கோபி-பாக்கியலட்சுமி

எழுதியவர்subhashini23 ஆகஸ்ட், 2024 அன்று 03:33 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கடந்த வாரம் எழிலுக்கு மீண்டும் சினிமா வாய்ப்பு கிடைக்காததை தெரிந்த ஈஸ்வரி, மோசமாக திட்டி இருந்தார். பின் ஜெனி கர்ப்பமாக இருப்பது வீட்டில் எல்லோருக்கும் தெரிந்து சந்தோஷப்பட்டு இருந்தார்கள். உடனே அமிர்தாவை பார்த்து ஈஸ்வரி, நீ எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறாய்? உங்களுக்கு என்று ஒரு குழந்தை வேண்டாமா? என இந்த முறை மோசமாக திட்டி இருந்தார். இதனால் அமிர்தா மனமுடைந்து எழில் இடம் சொல்ல, எழில் தன்னுடைய பாட்டி ஈஸ்வரியிடம் கோபப்பட்டு பேசி இருந்தார்.

தாத்தாவின் பிறந்தநாளுக்கு தயாரான பாக்கியா குடும்பம், குழப்பத்தில் கோபி-பாக்கியலட்சுமி

பின் இருவருக்கும் இடையே சண்டை நடந்தது. ஒரு கட்டத்தில் பாக்யாவுக்கு கோபம் வந்து, நீ வீட்டை விட்டு வெளியே போ எழில் என்று சொல்ல, எல்லோருமே அதிர்ச்சியானார்கள். கடைசியில் எழில் வீட்டை விட்டுப் போவதை பார்த்து பாக்கியா மனம் உடைந்து எதுவும் பேசாமல் இருந்தார். அமிர்தா- எழில் வீட்டை விட்டு கிளம்புவதை பார்த்து எல்லோருமே கதறி அழுது, வேண்டாம் என்று தடுத்தார்கள். இருந்தும் எழில் தன் முடிவில் மாறாமல் வெளியேறி ஹோட்டலில் தங்கி இருக்கிறார். இந்த விஷயத்தை எல்லாம் இனியா தன்னுடைய அப்பா கோபியிடம் சொல்லி அழுதார்.

பாக்கியலட்சுமி சீரியல்:

பின் கோபி, அமிர்தாவுக்கு போன் செய்து அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சென்று இருந்தார். ஆனால் எழில், நீங்கள் இங்கிருந்து கிளம்புங்கள் என்று சொன்னவுடன், கோபி பணத்தை கொடுக்க, எழில் வாங்க மறுத்தார். இன்னொரு பக்கம் பாக்கியா, எழில் ரூமிற்கு போய் அங்கிருக்கும் பொருட்களை பார்த்து அழுது, அமிர்தாவுக்கு போன் செய்து பேசி இருந்தார். இந்த வாரம் கோபி, தன்னுடைய மகன், மருமகள் வீட்டை விட்டு வெளியே போனது குறித்து சொல்ல, ராதிகா கோபத்தில் பேச இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது .

தாத்தாவின் பிறந்தநாளுக்கு தயாரான பாக்கியா குடும்பம், குழப்பத்தில் கோபி-பாக்கியலட்சுமி

சீரியல் கதை:

மறுநாள் கோபி, எழிலை பற்றி செழியனிடம் பேசி இருந்தார். பின் தான் அப்பாவாக போகும் விசயத்தை செழியன் சொல்ல கோபி சந்தோசப்பட்டார். இன்னொரு பக்கம் வீட்டில் தாத்தாவின் 80 ஆவது நாள் பிறந்தநாளை கொண்டாட எல்லோருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஈஸ்வரிடம் இந்த விஷயத்தை சொல்ல ஆரம்பத்தில் அவர் மறுத்தாலும் பிறகு சம்மதித்து விடுகிறார். அமிர்தா-எழில் இருவருமே வீட்டில் நடந்ததை பற்றி பேசிக் கொண்டிருக்க ஈஸ்வரி, தாத்தாவின் 80வது பிறந்தநாளுக்கு வரவேண்டும் என்று கூப்பிட, அதற்கு எழில் வர மறுத்தார்.

தாத்தாவின் பிறந்தநாளுக்கு தயாரான பாக்கியா குடும்பம், குழப்பத்தில் கோபி-பாக்கியலட்சுமி

நேற்று எபிசோட்:

உடனே கோபமாக ஈஸ்வரி, நீ வராதே என்று சொல்லி போனை வைத்து விட்டார். நேற்று எபிசோடில், எழில் வராததை நினைத்து ஈஸ்வரி வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் அமிர்தா, நான் வரவில்லை. நீங்கள் போயிட்டு வாங்க, தாத்தா ரொம்ப சந்தோஷப்படுவார் என்று சொல்ல, நீ இல்லாத இடத்திற்கு நான் போக மாட்டேன் என்று எழில் அவருக்கு ஆறுதலாக பேசுகிறார். பாட்டி தன்னுடைய கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல 12 மணி வரை காத்து இருந்து வாழ்த்துக்கள் சொல்லி சர்ப்ரைஸ் பண்ணுகிறார்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோடில், ராமமூர்த்தியின் 80 ஆவது பிறந்தநாளை கொண்டாட எல்லோருமே தயாராகி இருக்கிறார்கள். ஆனால் தாத்தாவோ, எழில் போன் பண்ணாதது நினைத்து வருத்தப்பட்டு பேசுகிறார். பின் எழில் வராதது நினைத்து எல்லோருமே வருத்தப்பட, பாக்கியா மட்டும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். கடைசியில் எல்லோரும் கோவிலுக்கு கிளம்புகிறார்கள். இதை வெளியில் இருந்து பார்த்த கோபி, எதற்கு கிளம்புகிறார்கள்? என்ன வீட்டில் விசேஷம்? என்று குழப்பத்தில் செழியனுக்கு எனக்கு கால் செய்கிறார். ஆனால், அவர் எடுக்கவே இல்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.

தலைப்புகள்
#பாக்கியலட்சுமி சீரியல்#Baakiyalakshmi Today Episode#இன்றைய எபிசோட்#baakiyalakshmi serial
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement